பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 33

டால் தங்கள் நிலைக்குக் குறைவு ஏற்படும் என்று கருதுகின்றனர். இந்நிலை விரைவில் மாறவேண்டும். ஆங்கிலம் படித்துப், பட்டம் பெற்றவர்கள் தாய்மொழியைப் பயிற்றல் பெருமை என்ற கருத்தை மக்களிடையே கால் கொள்ளச் செய்யவேண்டும். ஆங்கில அறிவுடன் பட்டம் பெற்ற தாய்மொழியாசிரியர்களுக்கு ஊதிய அளவிலும் பிற துறைகளிலும் சிறிது அதிகச் சலுகைகள் அளிக்கப் பெற்ருல், பல பட்டதாரிகளைத் தாய்மொழியாசிரியர்களாகப் பணியாற்றச் செய்யமுடியும். ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்த பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக ஆங்கில மொழியைக் கற்பிக்கும் முறைகளிலும் பயிற்சி பெற்றனர். அதுபோலவே தாய்மொழி பயிற்று மொழியாக வந்திருக்கும் இக் காலத்தில் அனைவரும் தாய்மொழிப்பயிற்றலில் கட்டாயமாகப் பயிற்சிபெற வழி செய்யவேண்டும். ஆணுல், இன்றைய நிலை என்ன ? பிற பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்கள் தாய்மொழியைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளுவதில்லை. தாம் தாய்மொழி யில் சாதாரணமாகச் செய்யும் பிழைகளைப்பற்றியும் கவலைப் படுவதில்லை. தாய்மொழியில் எப்படி வேண்டுமானுலும் எழுதலாம் என்ற மனப்பான்மை மேலும் கேடு பயக்கின்றது. இந்நிலையை இனி வளரவிடக் கூடாது. அரசினர் இத் துறையில் சிறிது தனிக்கவனம் செலுத்தினுல் விரைவில் சிறந்த தாய்மொழியாசிரியர்களைத் தோற்றுவிக்க முடியும்.

தமிழ்மொழியின் அவசியத்தை நன்குணர்ந்த உயர்திரு தி. சு. அவினுசிலிங்கம் அவர்கள் தாம் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் உயர்நிலைப்பள்ளிக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்கு முதலிடம் அளித்தார்கள். தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் நிலையினையும் ஓரளவு உயர்த்திஞர்கள். இதுகாறும் கல்வித் துறையின் வரலாற்றிலேயே இராத பெருமையைத் தாய்மொழி ஆசிரியருக்கு அளித்தார்கள், கல்லூரிகளில் பணியாற்றிவரும் தாய்மொழியல்லாத பிற்பாட ஆசிரியர்களுக்கு இருந்துவரும் "அரசிதழில் பதிவு பெறும் நிலையைத் (Gazetted rank) தாய்மொழி.

த-4