பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 555

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு விதமான தொடக்கம் உண்டு. கவிதைப் பாடமாக இருந்தால் பாடலே இசையுடன் ஒன்றிரண்டு தடவைகள் படித்தல் என்றும், உர்ைநடையாக இருந்தால் நல்ல முறையில் ஒரு தடவை படித்தல் என்றும், இலக்கணப் பாடமாக இருந்தால் கற்பிக்கவேண்டிய இலக்கண விதியை வருவித்தற்கு வேண்டிய எடுத்துக்காட்டுக்களை எழுதுதல் என்றும் குறித்துக் கொள்ளலாம். சில மாணுக்கர்களே இசையுடன் படிக்கச் செய்யலாம். இதல்ை பாநடைக்கும் உரைநடைக்குமுள்ள வேற்றுமையைக் கவனிக்கச் செய்யலாம். (iii) கருத்து உணர்தல். கவிதைப் பாடமாக இருந்தாலும், உரைநடைப் பாடமாக இருந்தாலும், தேர்ந்தெடுத்துள்ள வினுக்களே விடுத்துப் படித்த பகுதியின் கருத்தையுணர்ந்துள்ளனரா எனப் பார்க்கலாம். அனுபவமில்லாத ஆசிரியர்கள் இவ் விளுக்களைப் பாடக் குறிப்பிலேயே எழுதிக் கொள்ளவேண்டும். அனுபவமுள்ளவர்கள் குறிப்புக்களே மட்டிலும் குறித்துக்கொள்ளலாம். இலக்கணப் பாடமாக இருந்தால் சில வினுக்களை விடுத்துக் கொண்டே கற்பிக்கவேண்டிய இலக்கண விதிகளே மாளுக்கர்களிடமிருந்தே வருவிக்க முயலலாம். கீழ் வகுப்புக்களுக்குரிய கதைபொதி பாடல்களாக இருந்தால், கதையைச் சுருக்கமாகச் சொல்லச் செய்யலாம். இவற்றைப் பாடக்குறிப்புக்களில் குறித்துக் கொள்ளலாம். (iv) சொல் விளக்கம். கவிதைப் பாடமாக இருந்தால் சில சொற்களின் சந்தியைப் பிரித்து விளக்கிப் பொருளுரைக்கலாம். தொடை நயம், அணியின் சிறப்பு இவற்றைக் காட்டலாம். உரைநடைப் பாடமாக இருந்தால், அரிய சொற்கள், சொற்ருெடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைச் சொந்த வாக்கியங்களில் அமைக்கும் பயிற்சி களையும், வாக்கிய மாற்றப் பயிற்சிகளையும் தரலாம். இப் பயிற்சிகளால் புதிதாகக் கற்பிக்கப்பட்ட பாடம் உறுதியாக உள்ளத்தில் படியும். இங்கு, கரும்பலகையில் பாடத்தின் திரண்ட கருத்தைச் சுருக்கமாக வரையலாம். பாடம் வளரும்பொழுதே இக் கரும்பலகைச் சுருக்கமும் வளர்ந்தால் பொருள் விளக்கத்துடன் காலச் சிக்கனமும் அமையும்.