பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 தமிழ் பயிற்றும் முறை

பாட நிகழ்ச்சியில் ஆசிரியருக்கும் மாணுக்கர்களுக்கும் இடையில் ஏற்படவேண்டிய கூட்டுறவைப்பற்றி ஆசிரி. யர்கள் சிந்திக்கவேண்டும். ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும்பொழுது வெளித்தோன்றும் முயற்சியின் பெரும்பகுதி மாணுக்கர்களுடையதாக இருத்தல் இன்றியமையாதது. எனவே, ஆசிரியர் தாம் கற்பிக்கப்போகும் பாடத்தில் மாளுக்கர்களுடைய சுயமுயற்சியினுல் கற்கத்தகும் பகுதி. கள் யாவை எனச் சிந்தித்து அவற்றைப் பாடக்குறிப்பில் குறித்தல் சிறந்தது. பாடங்களே முன்னதாகவே அவர்கள் கண்ணுேட்டமாகப் படித்திருத்தல், அகராதி, மேற்கோள் நூல்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி, கட்டுரைக் குறிப்புக்கள் தயாரித்தல், பிற பாடப் பொருளே மொழிப்பாடத்துடன் ஒப்பிடும் பயிற்சிகள் ஆகியவை மாணுக்கர்களின் சுயமுயற்சி. யினுல் பெறக்கூடியவை என்று கருதலாம்.

பாடக் குறிப்பின் ஐந்தாவது படி முடிவு கூறுதல். சில விளுக்களைக்கொண்டு கற்பித்த பாடக் கருத்துக்களைத் தொகுத்துரைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும். கவிதை உரைநடைப் பாடங்களில் இதை மிக அழகாகச் செய்யலாம். இலக்கணப் பாடமாக இருந்தால் கற்ற விதிகளுக்கு எடுத்துக்காட்டினைக் கூறும்படியோ, எடுத்துக்காட்டுக்களில் விதிகளைப் பொருத்திக் காட்டும்படியோ பயிற்சிகள் தரலாம். அடுத்த நாளுக்குரிய சில வேலைகளையும் இங்குக் குறிப்பிடலாம்.

இவ்வாறு ஆயத்தம் செய்யப்பெற்ற பாடக்குறிப்பைப் பயன் படுத்தும்பொழுது 45 மணித் துளிகள் உள்ள ஒரு பாட வேளையில் 5 மணித்துளிகளே ஊக்குவித்தற்கும், 30 மணித்துளிகளைப் பாட வளர்ச்சிக்கும் 10 மணித் துளிகளைத் தொகுத்துரைத்தல், கரும் பலகை வேலை, வீட்டு - வேலை தருதல் ஆகியவற்றிற்கும் செலவழிக்க முயலவேண்டும். அடியிற் காட்டியுள்ளவற்றை மாதிரிப் பாடக்குறிப்பின் அமைப்பாகக் கருதலாம்.