பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 தமிழ் பயிற்றும் முறை

மாதிரிப் பாடக்குறிப்புக்கள்

1. செய்யுள்

கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்

கொடியில்வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறும்

தேறலுவாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும்

இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையும் நறுந்தேனும்

விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலின் கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில்

விழுந்துவினை கெடுப்போம் எங்கள் குறக் குடிக்கடுத்த

இயம்பிதுகாண் அம்மே.

1. வகுப்பு : 5-ஆம் படிவம்

2. பாடம்: மதுரை மீளுட்சியம்மை குறம்-" கொழுங்

கொடியின்.’’ என்ற மேற்காட்டிய பாடல்.

காலம் : 45 மணித்துளிகள்

4. நோக்கம் : கருத்துணர்ந்து கவிதையின் பத்தினை

நுகரும்படி செய்தல்.

5. ஊக்குவித்தல் : குறத்தி ஒருத்தி மதுரை மீளுட்சி

யம்மைக்குக் குறி சொல்லுவதாகக் கற்பனை செய்து

குமரகுருபர அடிகள் : மீளுட்சியம்மை குறம்.