பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 559

குமரகுருபரர் பாடியது மீனுட்சியம்மை குறம்’ என்பது. " பாட்டுடைத் தலைவி மீனுட்சியம்புை சொக்கலிங்கப் பெருமான்மீது காதல்கொள்ளுகின்ருள்; கருத்திழக்கின்ருள்; தோள் மெலிகின்றது ; வ8ள நெகிழ்கின்றது; மெய் பசக்கின்றது; முகமும் வாடுகின்றது. கருத்தில் நின்ற காதலனே அடைவது எப்பொழுது என எண்ணி எண்ணி ஏங்குகின்ருள். அந்நிலையில் பொதியமலையில் வாழும் குறத்தி ஒருத்தி மதுரையை நோக்கி வருகின்ருள். காதல் நோயால் மெலிந்து வாடி அமர்ந்திருக்கும் மீளுட்சியம்மையைக் காண்கின்ருள். அம்மை தன் கரத்தை நீட்ட, குறத்தி குறி சொல்லுகின்ருள். முதலில் தன் குலப் பெருமையைக் கூறுகின்ருள்.”

6. பாடவளர்ச்சி : குறத்தி கூறும் குலப் பெருமையை இதே கேளுங்கள்’ என்று கூlப் பாடல இசையோடும் தாளத்தோடும் தெளிவாக ஒன்றிரண்டு முறை பாடுதல் ; மாணுக்கர் நன்கு சுவைக்கும் அளவு பாடுதில். -

பிறகு பாடலே அரை அரை அடியாகப் பாடி மாணுக்கர்களைத் தொடர்ந்து பாடுமாறு செய்தல். ஒன்றிரண்டு மாணுக்கர்களேத் தனித்தனியாகவும் பாடச் செய்தல்.

ஒரு தடவை படிக்கும்பொழுதே அடிதோறும் உள்ள கல்லி, தேறல், வாய்மடுத்தல், பாயல், கண்படுத்தல், கயற்கணி, வினைகெடுத்தல் என்ற அருஞ் சொற்களையும் சொற்ருெடர்களையும் விளக்குதல். -

குறத்தியின் இயற்கையோ டொட்டிய வாழ்வு ஒவியம் போல் தீட்டப் பெற்றிருப்பதை மானுக்கர் உணர்ந்து அனுப விக்குமாறு விளக்கந் தருதல். விருந்தோம்பிய பின்புதான் குறத்தி உறங்கச் செல்கின்ருள் என்பதை உணர்த்தி, தமிழ்நாட்டின் தலையாய பண்பு குறமகளிடமும் காணப்பெறும் சிறப்பைப் பாராட்டிப் பேசுதல். படிப்பறிவு இல்லாத குறத்தியாயினும் அவள் உண்டு உடுத்தி உறங்கு வதே வாழ்வென் றமையாது கயற்கண்ணியம்மையைத் தொழுது வாழும் இறையன்பினே மேற்கொண்டமையைப் பாராட்டுதல்.