பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 56 f

இதன்கண் வந்து சிறிதுகாலத் தங்கிய வளவானே அறிவுவளர்ந்து இன்பத்திற்றிளேத்தல் காண்கின்றேமாகலின், அவை அறிவு வளர்ச்சியும் அதன்வழியே இன்பநுகர்ச்சி யும் எய்து தற்கே இங்கு வருகின்றனவென்பது புலனுகின்றது. புலனுகவே, இவ்வுலகுக்கு வருமுன் அறியாமையும் துன்பமும் வாய்ந்தனவாகவே எல்லாவுயிர்களும் இருத்தல் வேண்டுமெனவும், இங்கு வந்தபின் அவை அறிவும் இன்பமுஞ் சிறிது சிறிதாகக் கைக்கூடப் பெறினும் அவை இரண்டும் முதிர்ந்த நிலக்கு வரும் முன்னரே உயிர்கள் இதனைவிட்டு மறைந்தொழியக் காண்டலால், அரை குறையாய்ப் பெற்ற அறிவு இன்பங்களுடனே அவ்வுயிர்கள் பிறவியை முற்றும் விட்டொழிதல் இசையாதென வும். அறிவு இன்பங்களிரண்டும் ஒரு சிறு குறையும் இல்லையாய் நிறைந்த நிலக்கு வரும்வரையில் இந்த உலகத்திலோ அல்லது இதனையொத்த வேறு உலகங்களிலோ அவை பற்பல பிறவிகளே யெடுக்கு மெனவும் உய்த்துணர்கின்ருேம். எனவே, இப்பிறவியிற் காணப்படும் நிகழ்ச்சி கொண்டு இதனுெடு தொடர்புடைய முற்பிறவி நிகழ்ச்சியும், இனித் தொடரும் பிற்பிறவி நிகழ்ச்சியும் காணவல்ல அறிவு விலங்கினங்கட்கு இன்றி மக்களுயிர்க்கு மட்டுமே அமைந்திருத்தலால், மக்கள் வாழ்க்கையானது பகுத்தறிவு விளக்கத்தையும் அதன். வழியே இன்பப் பேற்றையுமே அவாவி நிற்றலும், அறிவு விளங்கப் பெறுவதெல்லாம் அறியாமை வாயிலாக வருந்: துன்பங்களே நீக்கி இன்பத்தைப் பெறுதற் பொருட்டாகவே நிகழ்தலாற் பிறவி யெடுப்பதன் முடிந்த நோக்கம் மாருப் பேரின்பப் பேருகவே கடைக் கூடுதலும் தாமே போதரும். இவையே பண்டை நந்தமிழாசிரியர் கண்ட முடிந்த வுண்மைகளும் ஆகும். இஃது ஆசிரியர் தொல்காப்பியளுர், எல்லா உயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉம் மேவற் ருகும் ”

-பொருளியல். 27.(இளம்),

என்று அருளிச் செய்தவற்ருனும், உறுதிப்பொருள்களைப்

த-37