பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 585

(i) எடுக்கிறேன், எடுத்தேன், எடுப்பேன் என்னும் வினேச்சொற்கள் தொழிலத் தெரிவிப்பதோடு தொழில் நடக்கும் காலங்களையும் தெரிவிக்கின்றன என்று கூறி வினைச் சொற்களுக்குக் காலம் உண்டு என்பதையும் தெரிவித்தல்.

(ii) மூன்று காலங்கள் : (அ) எடுத்தேன்-சென்றகாலம் : அஃதாவது கடந்த

காலம்-இதை இறந்தகாலம் என்பர். (ஆ) எடுக்கிறேன்-நடக்கின்ற காலம் ; இதை நிகழ்

காலம் என்பர். (இ) எடுப்பேன்-நடக்கப்போகும் காலம்; அஃதாவது,

வருங்காலம்-இதை எதிர்காலம் என்பீர். 7. பாடமுடிவு : () ஒவ்வொரு காலங்களைக் குறிக்கும் ஒருசில வாக்கியங்களைக் கூறும்படி செய்தல்.

(ii) கோடிட்ட இடத்தில் சரியான வினைச்சொற்களே அமைக்கச் செய்தல்.

நேற்று தச்சன் வெட்டினன் இப்பொழுது தச்சன் நாளே தச்சன் (iii) பின்வரும் வாக்கியங்களில் வினைச்சொற்களின் காலங்களை மாற்றி எழுதச் செய்தல்.

இராமன் படித்தான் (நிகழ் காலமாக) மாணுக்கர் விளையாடுகின்றனர் (இறந்த காலமாக) பார்வதி உண்டாளா ? (எதிர்காலமாக) அடுத்த நாள் வரும்பொழுது பாடப் புத்தகத்திலிருந்து ஆறு வினைச்சொற்களே எடுத்து எழுதி அவற்றின் காலங்களே மாற்றி எழுதிவரும்படி வீட்டு-வேலையாகக் கொடுத்தல்.