பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 567

(தமிழ் மொழியில் வினைமுற்றுச் சொல்லே எழுவாயைத் தன்விகுதியால் அறிவித்துவிடும் என்பதை மாணுக்கர்களிட மிருந்து வருவித்து மேல் நேரல்கூற்றுக்களின் இறுதியில் நான், நீ என்ற சொற்கள் மிகை என்பதை அறியச் செய்தல். நேர் கூற்றிலுள்ள தன்மைப் பெயர் பன்மையாயின் நேரல் கூற்றிலும் அவ்வாறே அமைக்கவேண்டும் என்பதையும் வருவித்தல்.) -

(இ) நேர் : கோவிந்தன் நான் பரிசு பெற்றேன்’

என்ருன். நேரல் : கோவிந்தன் தான் பரிசுபெற்ற தாகக் கூறினன்.

மேற்கூறிய எடுத்துக்காட்டுக்களிலிருந்து, நேர்கூற்றில் துணைநிலை வாக்கியத்திலுள்ள எழுவாய் எந்த இடத்தைச் சார்ந்ததோ அந்த இடத்துப் பெயராக நேரல் கூற்றில் மாற்றியமைக்கவேண்டும் என்பதை வருவித்தல்.

(இங்கு, படர்க்கைப் பீொதுப்பெயர் தான், தாம், என்பனவே என்றும், அவன், அவள், அவர், அது, அவை என்பன சுட்டுப்பெயர்களே என்றும் ஆசிரியர் அறிவித்தல் இன்றியமையாதது.)

(ii) முன்னிலைப் பெயர் :

(அ) நேர் : தந்தையார், "நீ பள்ளிக்குப் போக

வேண்டும்' என்று என்னிடம் கூறினர். நேரல் : தந்தையார் நான் பள்ளிக்குப் போகவேண்டியதாக என்னிடம் கூறினர். (ஆ) நேர் : தந்தைப்ார். * நீ பள்ளிக்குப் போக

வேண்டும்” என்று உன்னிடம் கூறிஞர். நேரல் : தந்தையார் நீ பள்ளி போகவேண் டியதாக உன்னிடம் கூறிஞர். (இ) நேர் : தந்தையார், நீ பள்ளிக்குப் போக

வேண்டும்” என்று மாதவனிடம் கூறிஞர்.