பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 569

களிலும் அமைத்துக் கூறினும் தவருகாது என்பதை ஆசிரியர் கூறலாம்.

இவற்றுள், முதன்மை வாக்கிய வினைமுற்று இறந்த காலமாயின் நேரல்கூற்றிலுள்ள வினையை இறந்த கால வினேச் சொல்லாக அவசியம் மாற்றவேண்டும் என்பதை வற்புறுத்தல். விதிவிலக்கு : “ சூரியன் கிழக்கில் உதிக்கும்’ தீ சுடும்’ என்பன போன்ற முக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்கள்.

(ஒருவர் பேசிய பின்னரே அப் பேச்சை நாம் கொண்டு கூறுகின்ருேமாகலின், நேர் கூற்றில் முதன்மை வாக்கிய வினைமுற்றுச்சொல் நேரல்கூற்றில் பெரும்பாலும் இறந்த காலத்ததாகவே இருக்கும் என்பதை உணர்த்துதல்.)

(6) சில சொற்களை மாற்றும்முறை

நேர் : “ இன்று இங்குத் தங்கி, நாளைக்குக் காசிக்குச் செல்வேன் ’ என்ருன் வரதன்,

நேரல் : வரதன் அன்று அங்குத் தங்கி மறுநாள் காசிக்குச் செல்வதாகக் கூறினன்.

இன்று, இங்கு, நாளே என்பதை முறையே அன்று, அங்கு, மறுநாள் என்று மாற்றப்பட்டிருத்தலேக் காணச் செய்தல். இவைபோல, நேர்கூற்றிலுள்ள அண்மையும் நிகழ் காலமும் குறிக்கும் இடைச்சொற்கள் முதலியவற்றை நேரல் கூற்றில் முறையே சேய்மையும் இறந்தகாலமும் குறிப்பவையாக மாற்றவேண்டும் என்பதை வருவித்தல். அடியிற்கண்ட நேர் கூற்றுக்கு ஏற்ற நேரல்கூற்றை மாணுக்கர்களிடமிருந்தே வருவிக்கலாம்.

நேர் கூற்று நேரல் கூற்று

இது وئی}El இவை eos 60) of இன்று அன்று இன்றிரவு அன்றிரவு

இப்பொழுது அப்பொழுது