பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 578

களின் உளப் பண்புகள், கற்றல் விதிகள் ஆகியவைபற்றிய அறிவு ஆசிரியருக்கு மிகவும் இன்றியமையாதவை. எத்துறையிலாயினும் சரி தலைமைப் பதவியிலிருப்போருக்கு மனிதப் போக்கைப்பற்றிய அறிவு இன்றியமையாதிருப்பது போல, மாணுக்கர்களின் கொள்ளும் திறனுக்கேற்றவாறு பாடத்தை ஆயத்தம் செய்யும் ஆசிரியர் மாணுக்கர்களின் மனப்போக்கை நன்கு அறிந்திருத்தல் இன்றியமையாதது. நான்காவது : மாணுக்கர்கள் கற்கும் நிலைகளுக்கேற்றவாறு கையூாளவல்ல புதிய பயிற்று முறைகளே ஆசிரியர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். உளவியல் அடிப்படையில் இவற்றைத் தெளிவாக அறிந்திருந்தால்தான் எந்நிலைகளேயும் சமாளிக்கும் ஆற்றல் கைவரப்பெறும்.

பாடக்குறிப்பு ஆயத்தம் செய்தலால் விளையும் நன்மைகள்: ஆசிரியர் பாடக்குறிப்பு ஆயத்தம் செய்து பாடம் கற்பித்தலினுல் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர் சிந்தனே யில் ஒர் ஒழுங்கு இருக்கும். எழுதிப் பார்த்தால்தான் சிந்தனேக்கு ஓர் ஒழுங்கு அமையும். இவ்வாறு எழுதியமைக்கும்பொழுது பல்வேறு விதமான முறைகள், போக்குகள் மனத்தில் எழ இடம் உண்டு : பாடப் போக்கை மாற்றியும் திருத்தியும் அமைக்க ஒரு வாய்ப்பும் ஏற்படும். கற்பிக்க வேண்டிய அனேத்தையும் ஒர் ஒழுங்குமுறையில் நினைவில் வைத்துக் கொள்ளுதல் எல்லோருக்கும் எளிதன்று ; பாடக். குறிப்பு அதற்குப் பெருந் துணைபுரிகின்றது. பாடம் தொடர்ந்து செல்லும்பொழுது சான்று பகரவோ பிற காரணத்திற்காகவோ பாடத்தை விட்டு விலகும்பொழுது மீண்டும் பாடத்தில் விட்ட இடத்தை வந்து பிடிப்பது அனேவருக்கும் இயலாததொன்று. எதிர்பாராத வண்ணம் பாடம் விரிந்து வளர்ந்து விலகிச் செல்லுங்கால், பாடக் குறிப்பு மீட்டும் ஆசிரியரை நேரிய வழியில் திருப்புவதற்குத் துணையாக விருக்கும். பெரும்பாலான ஆசிரியர்கள் ஆண்டுதோறும் ஒரே வகுப்பிற்கு ஒரே பாடத்தைப் போதிக்கும் வாய்ப்பையே பெற்றுள்ளனர். மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் பாடக்குறிப்பை எழுதிக் காலத்தை வீணுக்குதல் சரியன்று. உண்மையான ஆசிரியர்கள்