பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 575

வேண்டும். மேற்கொள்ளும் பொருளுக்கேற்றவாறு பயிற்று முறைகளைத் தழுவுதல் நல்லாசிரியரின் கடமையாகும். நவீன கல்வி முறைப்படி வளர்ந்துள்ள பல்வேறு முறைகளில் பொருந்துவனவற்றைப் பாடக்குறிப்பில் குறிப்பிடவேண்டும். பாடம் எந்த அளவு வெற்றியுடன் நிறைவேறியது ? எந்த அளவு எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறின ? முழுவதும் நிறைவேறவிடின், நிறைவேருத பகுதிகள் யாவை ? சில முறைகளைக் கையாண்டதால் நேரிட்ட குறைகள் யாவை ? அக் குறைகள் துணைக்கருவிகளின் குறைவால் ஏற்பட்டனவா ? என்பனபோன்றவற்றை அறிவதற்குப் பாடக்குறிப்பில் இடம் இருத்தல்வேண்டும். பாட முடிவில் அடுத்த படி யாது என்பதை மாளுக்கர்கள் தெளிவாக அறியவேண்டும் ; அப் படிக்குச் செல்ல அவர்கள் ஆவலுள்ளவர்களாக இருக்குமாறு பாடம் அமைய வேண்டும்; பாடக் குறிப்பு அதையும் குறிப்பிடவேண்டும். ஒப்படைப்புக்கள் இல்லாத பாடக்குறிப்பு குறைவுள்ளது என்றே கருதவேண்டும். எல்லாப் பாடங்களும் ஒரே மாதிரியாக இரா. சில பாடங்களுக்கு அதிகமான கூறுகளும் தேவைப் படக்கூடும். எனவே, பாடங்களுக் கேற்றவாறு மேற்கூறிய பண்புகள் அமையவேண்டும்.

பாடக்குறிப்பு உருவாகும் பொழுது விலக்கற்குரியவை: பாடக் குறிப்புக்களே ஆயத்தம் செய்யுங்கால் சிலவற்றை ஆசிரியர்கள் விலக்கவேண்டும். பயிற்றல் துறைக்குப் புதிதானவர்கள் சிறப்பாக அவற்றைக் கவனத்தில் இருத்த வேண்டும்.

பாடத்தின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும் பாடக் குறிப்பில் புகுத்தினுல் அது மயக்கவுணர்ச்சியைத் தருமே யன்றி விளக்கத்தைக் காட்டாது. முக்கியமான குறிப்புக்களைமட்டிலும் கோவையாகக் காட்டினுல் போதுமானது. அவற்றைக்கொண்டு அவற்ருேடு தொடர்புள்ளவற்றை நிறைவு செய்து கொள்ளுமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். மிக மேம்போக்காகப் பாடக்குறிப்பு அமைதலும் தவறு. முக்கியமாக, கற்பித்தல் துறைக்குப் புதியவர்கள் பாடக்