பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 577

பண்பு விரைவில் அமையப்பெற்ருல்தான் பாடம் சிறந்த முறையில் அமையும்.

இரண்டாவது: ஒரு தடவைப் பயன்படுத்திய பாடக் குறிப்பை மீட்டும் மீட்டும் அப்படியே பயன்படுத்தல் கூடாது. அதை மாற்றியும் திருத்தியும், கூட்டியும் குறைத் தும் புதிய முறையில் அமைத்துவரல் வேண்டும். ஒவ் வோர் ஆண்டிலும் ஒரே வகுப்பிற்கு ஒரே பாடத்தைக் கற்பித்தாலும், கற்கும் மாணுக்கர் புதிதானவர்களாதலின் அவர்கள் வாழ்ந்துவரும் சூழ்நிலையும் வேருகத்தானிருக்கும். கற்பிக்கும் முறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வரு கின்றது.

மூன்ருவது : தொடக்கத்தில் ஆசிரியர்கள் விரிவான பாடக் குறிப்பைக் கையாளவேண்டும். அனுபவம் பெறப் பெற, சுருங்கிய பாடக் குறிப்பை மேற்கொள்ள லுேண்டும். நாளடைவில் பாடக்குறிப்பைப் பார்க்காமலேயே கற்பிக்கப் பழகவேண்டும்.

நான்காவது : விழிப்புடனிருக்கும் வகுப்பறை அனு பவம் எப்படியிருக்கும் என்பதை எவரும் முன்னதாகவே திட்டமாக வரையறுக்க முடியாது. சுயமாக ஆசிரியர் கற்பிக்கும்பொழுது பாடம் விரிந்து செல்லவும் கூடும் ; வழியிலிருந்து விலகிச் செல்லவும் கூடும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது அச் சூழ்நிலையில் அவரிடம் உள்ளொளி தோன்றக் கூடும்; புதிய கற்பனை பிறக்கக் கூடும். இவற்ருல் பாடம் விலகிச் செல்லக் கூடும். ஆளுல், நல்லாசிரியர் பாடம் விலகுவதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு விலகிச் செல்வதால் பெரும். பயன் விளையவும் கூடும். மாளுக்கர் கற்றல் முக்கியமே. யன்றி, ஆசிரியர் ஆயத்தம் செய்த பாடக்குறிப்பன்று. வழிவிலகினும், முடிவுதான் முக்கியமானது ; கவனிக்கப் பெற வேண்டியது.

ஐந்தாவது : இரு மானுக்கர் ஒரே மாதிரியாக இருத்தலைக் காண்பதரிது. அவர்களிடம் எழும் துலங்கல்களும்

த-38