பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பள்ளிக்குரிய நூல்கள்

இன்று பள்ளிகளில் பயின்றுவரும் தமிழ் நூல்களே ஆழ்ந்த படிப்புக் குரியவை, அகன்ற படிப்புக் குரியவை மேற்கோளுக் குரியவை, மொழிப் பயிற்சிக் குரியவை என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சாதாரணமாகப் பாட நூல்கள் என்று வழங்கப்பெறும் நூல்கள் மாணுக்கர்களின் ஆழ்ந்த படிப்புக் குரியவை. துணைப்பாட நூல்கள் என்று வழங்கப்பெறும் நூல்களும், நூலகப் படிப்புக்குரிய நூல்கள் என்ற தலைப்பிலுள்ள நூல்களும், நாடகம், சிறுகதை, புதினம் முதலிய மறுமலர்ச்சி இலக்கியங்களும் அகன்ற படிப்புக்குரியவை. அகராதிகள், தகவல் தரும் நூல்கள் போன்றவை மேற்கோளுக் குரியவை. இவற்றைத் தவிர, மாணுக்கர்களின் மொழிப்பயிற்சிக்குப் பயன்படும் ஒருசில நூல்களும் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் அடங்கிய நூல்களைப்பற்றி ஈண்டு ஒருசிறிது ஆராய்வோம்.

1. பாட நூல்கள்

மொழிப் படிப்பைப் பொறுத்தமட்டிலும் ஆழ்ந்த படிப்பை வளர்ப்பதற்குப் பாடநூல்கள் பயன்படுகின்றன. இதற்காகவே பல வகுப்புக்களிலும் பாடநூல்கள் வைக்கப்பெறுகின்றன. அந்நூல்களிலுள்ள கவிதைப் பகுதி, உரை நடைப் பகுதிகளே மானுக்கர்கள் நுட்பமாக ஆராய்ந்து படிக்கவேண்டும். கருத்துணர்வதுடன் செயல்நயம் பொருள்நயம் இவற்றைச் சுவைத்து இன்புறுவதும், நல்ல மொழிப் பயிற்சி பெறுவதும் ஆழ்ந்த படிப்பின் நோக்கமாகும். கதைகளில் வரும் மாந்தர்களின் இயல்புகளே அறிதல், பாட அமைப்பின் ஒழுங்கை அறிதல், இலக்கணக் குறிப்புக்கள் சொற்ருெடர்கள் மரபுத் தொடர்கள் ஆகியவற்றை அறிவ.