பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 583

நாட்டின் தமிழ் நூல்களில் காணப்பெறும் படங்களில் பெரும் பான்மையானவை நாணத்திற் கிடமுள்ளவையாக உள்ளன. வண்ணப்படங்களோ தமிழ் நூல்களில் காணுதற்கரியவை. இந்தக் குறையைப் பாராட்டாமல் இளஞ்சிருர்கள் தாங்களாகவே நூல்களிலுள்ள படங்களுக்கு வண்ணந்தீட்டி மகிழ்கின்றனர் படங்கள் பாடங்களை விளக்குவனவாகவும் நூலிற்கேற்ற அளவிலும் இருக்கவேண்டும். மொழிப்புலவனே விட ஓவியக் கலைஞனே சிறுவர்களின்-ஏன் ? வளர்ந்தவர் களின்-கருத்தைக் கவர்ந்து வருகின்ருன் என்பதை நூல்களேப் பதிப்பிப்போர் நன்கு அறிதல்வேண்டும். வகுப்புக்குத் தகுந்த பெரிய சற்றுத் தடித்த எழுத்துக்களில் நூல்களே அச்சிடுதல் வேண்டும். அவ்வாறு அச்சிடும்பொழுது சொற்களுக்கும் வரிகளுக்கும் இடையில் ஏற்ற இடைவெளி இருத்தல்வேண்டும். பெரும்பாலான தமிழ் நூல்களில் தேவையான இடம்விட்டு அச்சிடுவதில் தக்க, கவனம் செலுத்தப்பெறவில்லை. முதல் இரண்டு வகுப்புக்களுக்குரிய நூல்களே 18 பாயின்ட் எழுத்திலும், அவற்றிற்கு அடுத்த மூன்று வகுப்புக்களுக்குரியவற்றை 14 "பாயின்ட்” எழுத்திலும், முதற்படிவத்திற்கு மேற்பட்ட வகுப்புகட்குரிய நூல்களே 12 பாயின்ட் எழுத்திலும் அச்சிடல் வேண்டு மென்று கல்வித் துறையினர் விதித்திருக்கின்றனர்.

பொருளமைப்பு : மாணுக்கரின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்கவல்ல பொருள்களைக்கொண்ட நூல்களே சிறந்தவை. தேர்ந்தெடுக்கப்பெறும் பொருள்கள் மாளுக்கர்களின் பருவநிலைக் கேற்றவாறும், அவர்களுடைய பட்டறிவுக் கேற்றவாறும், அவர்களின் அன்ருட வாழ்க்கை யில் நுகரக்கூடியவற்றிற்கேற்றவாறும் இருத்தல் வேண்டும். இவற்றை அனுசரித்துக் கவிதைப் பகுதிகளும் உரைநடைப் பகுதிகளும் அமைதல்வேண்டும். பாடங்களின் போக்கு நவீன முறையை யொட்டியும் கருத்தை ஈர்ப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.

பாடங்கள் ஒரே மாதிரியாக இராமல் பல்வேறு பொருள் களைப்பற்றிய செய்திகளைக்கொண்டு அமைதல்வேண்டும்.