பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 தமிழ் பயிற்றும் முறை

இலக்கியம், வரலாறு, நாட்டுப்பற்று, புதிய தகவல்கள் முதலிய பலவகைப்பாடங்களும் வகுப்பு மாணுக்கரின் வயது, மனநிலை, மொழியறிவு, பட்டறிவு ஆகியவற்றிற் கேற்றவாறு அமைந்து எளிமையிலிருந்து அருமை நோக்கிச் செல்ல வேண்டும். ஒவ்வொருபாடமும் தனித்தனியாக முடிதல் நலம். வாய்மொழி, எழுத்து ஆகிய இருவகைக் கட்டுரைகளும் எழுதுவதற்கேற்ற பொருள்கள் பாடங்களாக அமைதல் வேண்டும். கீழ்வகுப்புக்களிலும் கீழ்ப்படிவங்களிலும் பொதுவாகப் பாடங்களிலுள்ள பொருள் பற்றியும், அவற்றிலிருந்து தோன்றும் புதிய பொருள்பற்றியும் கட்டுரைகள் எழுதுவது அவர்களின் அறிவு நிலைக்கேற்ற பயிற்சியாகும். இம் மாணுக்கர்களிடமிருந்து தாமாகவே பிறர் துணையின்றி எழுதும் கட்டுரைகளை எதிர்பார்த்தல் இயலாததொன்று. எனவே, , அதற்குவேண்டிய பயிற்சிகளே யளிக்கவல்ல பாடங்கள் இந் நூல்களில் அமைந்திருத்தல் இன்றியமை. tiss fig1.

நூலாசிரியர்கள் : மாளுக்கர்கள் கற்கவேண்டிய பல்வேறு பொருள்களையும் ஒருங்கே தரக்கூடியவை பாடநூல்களே. ஆகவே, அவற்றை எழுதும் ஆசிரியர்கள் நன்ருகக் கற்றவர்களாகவும், பட்டறிவு மிக்கவர்களாகவும் இருத்தல்வேண்டும். இன்றைய தேவைக்குரிய நூல்களின் தன்மைகளே ஆராய்ந்தால், பாடநூல்கள் ஒரே ஆசிரியரால் எழுதப்பெறக் கூடியவை அல்ல. நூல்கள் நன்முறையில் அமைய வேண்டுமானுல் நால்வருடைய கூட்டு முயற்சி தேவை. எல்லாத் துறைகளிலும் புலமைபெற்ற ஒருவரே கிடைத்தல்அரிது. ஆகவே பொருள் துறையில் ஆழ்ந்துகற்ற ஒருவரும், மொழித்துறையில் புலமைமிக்க மற்ருெருவரும், மரணுக்கர்களின் உளப்பாங்கையும் பயிற்றும் முறைகளையும் நன்கு கற்றுப் பட்டறிவும் மிக்க பிறிதொருவரும், நூல்களேப் பதிப்பிப்பதில் திறமை வாய்ந்த வேறு ஒருவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் நல்ல நூல்களே உருவாக்கலாம். இந் நால்வருடைய தமிழ்ப்பற்றும், முற்போக்குடைய எண்ணமும், சுவைத் தன்மையும் சற்றேறக்குறைய ஒருவகைப்பட்டன வாக இருக்கவேண்டும். இவர்களைத் தவிர, நூல்களே வெளி