பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் பயிற்றும் முறை

யும் கற்பித்தல் அருமையன்று. எனவே, பி. டி. தேர்வுக்குச் செல்லும் அனைவருக்கும் தாய்மொழி (மண்டல மொழி) கற்பிக்கும் பயிற்சிகளே அளித்தல் பொருத்தமான தே. நாளடைவில் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் என்ற தனி வகுப்பினரே இல்லாது செய்தல்வேண்டும். பி. ஒ. எல். பட்டம் பெற்றவர்கள் பிறபாடங்களைப் பயின்று பட்டம் பெறவும், பிறபாடங்களில் பட்டம் பெற்றவர்கள் தாய்மொழியில் பட்டம் பெறவும் வாய்ப்புக்களே நல்க. வேண்டும். இனிப் பட்டம் பெற்று உயர்நிலப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் தாய்மொழியிலும் பிற பாடங்களிலும் நல்ல புலமை அடையும் வாய்ப்புக்களைப் பெறுவதற்கேற்றவாறு ஒவ்வொரு பட்டங்களுக்குரிய பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப் பல்கலைக் கழகங்கள் முன்வருதல் வேண்டும். கல்வி நிபுணர்கள், பல்கலைக் கழகத்தினர், அரசினர் ஆகிய மூவகையினரும் ஒருங்கு ஆராய்ந்து செய்யப்பெருத எந்தக் கல்வித் திட்டங்களும் நற்பயனை விளைவிக்கா.