பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 தமிழ் பயிற்றும் முறை

வற்றையும் இந்நிலை வகுப்புநூல்களுக்கு ஏற்றவையாகக் கொள்ளலாம்.

நடுநிலைப் பள்ளி வகுப்புக்குரிய பாடநூல்களில் தேசிங்கு ராஜன் கதை, கட்டபொம்மன் கதை போன்றவற்றை உணர்த்தும் வரலாற்றுப் பாடல்களும்; அல்லி அரசாணிமாலே, பவளக்கொடி மாலை, இராமய்யப்பன் அம்மானே போன்ற கதை பொதி பாடல்களும் (Ballads); தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திவ்யப்பிரபந்தம், திருப்புகழ் போன்ற துதிப் பாடல்களும் (Hymns): கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளேயவர்கள் பாடியுள்ள இராட்டைப் பாட்டு, உழவுத் தொழில் பாட்டு போன்ற எளிய இனிய வருணனைப் பாடல்களும்; திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற அறம் உரைப் பாடல்களும் (iெdactic verses): கம்பன், காளமேகம், இரட்டைப் புலவர் போன்றவர்களால் யாக்கப்பெற்ற தனிப்பாடல்களும் இடம்பெறத் தக்கவை. இவற்றைத் தவிர, தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்தங்களில் சில பகுதிகளும், இக்காலப் புலவர்கள் பாடியுள்ள சில பாடல்களும் இந்நூல்களில் இடம்பெறலாம்.

உயர்நிலைப் பள்ளிக்குரிய பாடநூல்களிலும் மேற்கூறப். பட்டவைகளேத் தவிர, பல நூல்களில் காணப்பெறும் வருணனைப் பாடல்கள் இடம்பெறல்வேண்டும். அன்றியும், பாரத வெண்பா, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற முற்காலக் காவியங்களிலிருந்தும்; கம்பராமாயணம், பாரதம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சி புராணம், நளவெண்பா போன்ற இடைக்காலக் காவியங்களிலிருந்தும்; இரட்சண்ய யாத்திரிகம், சீருப்புராணம், தேம்பாவணி, குசேலோபாக்கியானம் முதலிய பிற்காலக் காவியங். களிலிருந்தும்; மனேன்மணியம், பாஞ்சாலி சபதம் போன்ற இக்காலக் காவியங்களிலிருந்தும் இந் நிலை நூல்களுக்கு நல்ல பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை த் தவிர குறம், பள்ளு, அம்மானே போன்ற நாட்டுப்பாடல் வகைகளும்; சிறந்த இயற்கை வருணனைப் பகுதிகள், கைத்தொழில் சிறப்பு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, உலக