பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 587ー

ஒற்றுமை, சமுதாயத் தொண்டு, பெண்கள் உரிமை முதலியவற்றைப்பற்றிய இக்காலக் கவிஞர்களின் பாடல்களேயும் இந் நூல்களில் சேர்க்கலாம். சிலேடை, சீட்டுக்கவி முதலிய தனிப் பாடல்களும் இங்கு இடம்பெறத்தக்கவை. நான்மணிமாலை, அந்தாதி, பிள்ளேத் தமிழ், துது போன்ற பிரபந்த வகைகளிலிருந்தும் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்நூல்களைப் பற்றி மாளுக்கர்கள் அறியும் நிலையினே உண்டாக்க வேண்டும்.

உரைநடைப் பகுதிகள் . தொடக்கநிலைப் பள்ளிக்குரிய பாடநூல்களில் வரும் உரைநடைப் பாடங்கள் மாணுக்கர்களின் அறிவு நிலை, பட்டறிவு, மொழியறிவு முதலியவற்றைப் பொறுத்திருக்கவேண்டும். பாடங்கள் மானுக். கர்களுக்குச் சலிப்பு தரும் முறையில் மிக நீளமாக இருத்தல் கூடாது. அவை மாளுக்கர்களின் பட்டறிவிற்குட்பட்ட பொருள்களைப்பற்றியே அமைதல் வேண்டும் வீடு, குடும்பம், பள்ளிக்கூடம், வீட்டுப் பிராணிகள், நற்பழக்கங்கள், சிறுவர்கள் அறிந்த கைத்தொழில்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், விடுமுறை நாட்கள் முதலிய பொருள்களைப் பற்றிச் சிறுசிறு பாடங்களே எளிய இனிய நடையில் எழுதி இந்நூல்களில் சேர்க்கலாம்.

நடுநிலைப் பள்ளிக்குரிய உரைநடைப் பகுதிகள் ஒரே மாதிரியான பொருள்பற்றி இராமல் பல்வேறு வகைப்பொருள் பற்றியனவாக இருத்தல் வேண்டும். பஞ்சதந்திரக்கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், அறபுக்கதைகள் போன்ற கற்பனை ஊற்றை விளேவிக்கும் பொருள்களைப்பற்றியனவும்; அறிவியற் புதுமைகள், புதிய பயிர்த்தொழில் முறைகள், கைத்தொழில் நுணுக்கம், குடிசைத் தொழில், மாணுக்கர் அறியும் நிலையிலுள்ள பெரியார்களின் வரலாறு முதலிய செய்திகளைத் தருவனவும்; மகிழ்ச்சிச் செலவுகள், புதிய நாடுகளைக் கண்ட நிகழ்ச்சிகள், வீரச் செயல்கள், புதிய குடியேற்றங்களைப்பற்றிய வரலாறுகள், நீர்த்தேக்க-மின். சாரத் திட்டங்கள் ஆகிய நேர்முக அனுபவங்களைப்பற்றியனவும்; மறைந்த புகழ்பெற்ற பெரியார்களின் வாழ்க்கை