பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 தமிழ் பயிற்றும் முறை

வரலாறுகளைப்பற்றியனவும்; நம்மிடையே வாழும் அறிஞர். கள், நாட்டுப்பற்றுள்ள ஒருசில பெரியார்கள் ஆகியவர்களைப் பற்றியனவும்; சிற்பம், ஓவியம், பிற கலைகள் முதலியவற். றைப் பார்த்துப் பாராட்டிப் புகழக்கூடியனவும் ஆகியவை உரைநடைப் பகுதியாக அமையலாம். இவற்றைத் தவிர, சிறந்த உரையாடல்களையும், உயர்ந்த நாடகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்ற பகுதிகளையும் உரைநடைப் பாடங்களாகக் கொள்ளலாம். இப் பாடங்களில் உயர்ந்த முறையில் நகைச்சுவை விளைவிக்கக் கூடிய ஒருசில பகுதிகளும் இடம் பெறலாம். அன்றியும், இந்நிலை மாணுக்கர்க்கு உரிய நூல்களில் மொத்தப் பாடங்களில் ஒரு பாதிக்காவது குறையாமல் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இலக்கியத் தொடர் புடையனவாக இருத்தல் வேண்டும். புலவர்களின் வரலாறு கள், இலக்கியப் புரலவர்கள், நூல்களே யாத்தும் வெளியிட்டும் வந்த வரலாற்றுக் குறிப்புக்கள், சிறந்த இலக்கியப் பகுதிகளின் உரைநடை முதலியன இவற்றுள் இடம் பெறலாம். இப்பகுதிகளைப்பற்றிய பாடங்கள் ஒரே ஆசிரியரால் எழுதப்பெற்றிருத்தல்வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிக்குரிய பாடநூல்களில் சில பாடங்கள் பழைய உரையாசிரியர்களின் நடைவேற்றுமையைக் காட்டக் கூடியனவாக இருத்தல்வேண்டும். அன்றியும், அவை அவ் வுரையாசிரியர்கள் உரைகண்ட இலக்கியங் களுக்கு முன்னுரையாக அமைந்தால் நலம். கருத்து வேற்றுமைகளுக்கு இடமில்லாத இக்காலச் சுவைக்கேற்ற புதிய பொருள்களைப்பற்றியும், புதிய கருத்துக்களைப்பற்றியும் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளே உரைநடைப் பகுதியாகத் தொகுக்கலாம். இலக்கியச் சுவையை வளர்க்கும் இலக்கியப் பகுதிகள், பண்டை நாடக வியலே விளக்கும் பகுதிகள், நுண்கலைகள், இசைக்கருவிகள், அறிவியல் புதுமைகள், உற்பத்திப் பெருக்கப் பெருந்தொழில் முறைகள், குடும்ப அறிவியல், கிராமப் புனரமைப்புபற்றிய செய்திகள், உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சினேப்பற்றிய செய்திகள், சிறந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள் முதலியவற்றை எடுத்துக்காட்டுக்களாகக் கொள்ளலாம்.