பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 59麗

சம்பந்தர் போன்ற சமயப்பெரியார்களின் வரலாறுகள் பிற சமயத்தினர்களின் மனம் புண்படாத முறையில் எழுதப் பெறல் வேண்டும்.

பிற செய்திகள் : பாடப் பொருள்களில் எவ்வித பிழைகளுக்கும் இடந்தரலாகாது. எடுத்துக்காட்டாக, இயற்கை எய்திய பெரியார்கள் இன்றும் இவ்வுலகில் வாழ்வதாகக் கூறு தலைத் தவிர்த்தல் வேண்டும் ; பதிப்புக்குப் பதிப்பு இதைக் கவனித்தல் அவசியம். அருவிகளின் (Water falls) ஆழம், மல்களின் உயரம், நதிகளின் நீளம், பெரியார்கள் வாழ்ந்தகாலம், கைத்தொழில்கள், தொழில் துறைகள் ஆகியவற்றைப்பற்றிய தகவல்களில் பிழை நேரிடாமல் பார்த்துக் கொள்ளல்வேண்டும். தமிழ் நூல்களில் நகைச்சுவையினைக் காண்பது குதிரைக்கொம்பாக உள்ளது; ஒன்றிரண்டு அத்தி பூத்த மாதிரி காணப்பெறினும், அவை மேல்நாட்டு இலக்கியங்களில் Humour என்று கூறப்ப்ெறும் தரத்தில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆனல், இக்காலத்தில் தோன்றியுள்ள மறுமலர்ச்சி இலக்கியங்களில் அத்தகைய நகைச்சுவைப் பண்பு தலைகாட்டத் தொடங்கியுள்ளது. கல்கி', 'நாடோடி’, ‘எஸ். வி. வி., புதுமைப்பித்தன்' போன்ருர் எழுதியுள்ளவற்றிலும், உலகம்சுற்றிய தமிழன் எ. கே. செட்டியார் எழுதியுள்ள பிரயாணப் புத்தகங்களிலும் மேனுட்டு Humour உடன் ஒப்பிடத்தக்க சில நகைச்சுவைப் பகுதிகளேக் காணலாம். அவற்றைப் பாட நூல்களில் சேர்க்கலாம். நகைச்சுவை பொருந்திய கதைகள், கட்டுரைகள், பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தனிப் பாடல்கள், சிலேடைச் செய்யுட்கள், சீட்டுக்கவிகள் முதலியவற்றைப் பாடநூல்களில் மிகுதியாகச் சேர்க்க வேண்டும்.

இன்று வெளியிடப்பெறும் பாடப்புத்தகங்கள் யாவுமே மனநிறைவு பெறக்கூடிய முறையில் இல்லை. எல்லோருமே தமக்கு எல்லாத் தகுதியும் இருப்பதாக எண்ணிக்கொண்டு பாடநூல்களே எழுதத் துணிகின்றனர்; மாணுக்கரின் நிலைக் கேற்றவாறு நூல் எழுதுவது எளிதான செயலன்று. பாட