592 தமிழ் பயிற்றும் முறை
நூல்களின் உற்பத்தியில் காணும் ஊழல்கள&னத்தையும் உயர்நிலைக்கல்வி அறிக்கை எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. நல்ல நூல்களே உற்பத்தி செய்வதில் இவ்வறிக்கை கூறும் யோசனைகள் அனேத்தும் நடை. முறையில் மேற்கொள்ளத் தக்கவை. அறிக்கை குறிப்பிடும் குழுவொன்று உருவாகி மேற்படி யோசனைகள் செயற்பட்டால், நல்ல முறையில் பாட நூல்கள் தோன்றும் என்பதற்கு ஐயமில்லை.
2. துணைப்பாட நூல்கள்
ஆழ்ந்த படிப்பைத் தவிர, விரைவாகவும் வாய்க்குள்ளும் படிக்கவேண்டிய பிறிதொரு படிப்பும் உண்டு. இதை அகன்ற படிப்பு என்று வழங்குவர். இதன் இன்றி யமையா இயல்புகள் விரைவாக வாய்க்குட் படித்தலும், கருத்துணர்தலுமாகும். அகன்ற படிப்பில் மூன்று நோக்கங்கள் நிறைவேறுகின்றன. முதலாவது: அறிவு நோக்கம். இதை வெஸ்ட் என்ற அறிஞர் மிக அழகாகக் கூறுகின்ருர்." அவர் நூலின் இதயத்தைத் தனியாக எடுத்து விடுதல்’ என்பதே அறிவு நோக்கம் என்று மொழிகின்ருர். அஃதாவது, விரைவாக நூலின் திரண்ட கருத்தைப் பிழிந்தெடுத்தலே அதன் பொருளாகும் ; விரைவாகப் படிக்கும்பொழுதே கருத்துணர்தல், சிந்தனேக் கருத்துக்களைப் போற்றுதல், உயிர் நில்ைக் கருத்தை உடனறிந்துகொள்ளுதல் ஆகிய திறன்களால் இந்நோக்கம் நிறைவேறும். இரண்டாவது: இலக்கிய நோக்கம். உலக அறிவையும் பொது அறிவையும் வளர்த்துப் படிப்பில் ஒரு பற்றை உண்டாக்கித் தாமாகவே படிக்க வேண்டும் என்ற ஆவலையும் பழக்கத்தையும் தோற்றுவிப்பதே இலக்கிய நோக்கமாகும். மூன்ருவது: மொழி நோக்கம். மொழியறிவை வளர்த்தலும் சொற். களஞ்சியத்தைப் பெருக்குதலும் மொழி நோக்கத்தின்
- Report of the Secondary Education Commission1953. பக்கம் 101-104.
- West: Bilingualism Li ā. I64.