பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 593

பாற்படும். ஆழ்ந்தபடிப்பில் அருமையாகக் காணும் புதிய சொற்களையும் சொற்ருெடர்களையும் தம் வாக்கில் வைத்து வழங்கும் பயிற்சியினேப் பெறுதல் போலவே, அகன்ற படிப்பில் கண்ணுறும் புதிய சொற்கள் சொற்ருெடர்களின் ஆட்சிகளேத் தெளிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டும். இவையும் மாணுக்கர்களின் சொற்களஞ்சியத்துடன் சேர்ந்து அவர்களின் கருத்துணரும் ஆற்றலே வளர்க்கும். வாய்க்குட் படிப்பில் பெறும் நன்மைகளையும் நோக்கங்களையும் அகன்ற படிப்பிற்குரியனவாக இணைத்துக் கொள்ளலாம். அகன்ற படிப்பின் நோக்கங்களே நிறைவேற்றும் வழிகளில் துணைப்பாடநூற் படிப்பும் ஒன் ருகும். எனவே, துணைப்பாட நூல்களைப்பற்றி ஈண்டு ஒரு சிறிது குறிப்பிடுவோம்.

நல்ல துணைப்பாட நூல்களின் பண்புகள் : பாட நூல்களின் நற்பண்புகளாகக் குறிப்பிட்ட , அனைத்தையும் அப்படியே துணைப்பாட நூல்கட்கும் கொள்ளலாம். புறத் தோற்றம், அகத்தோற்றம், பொருளமைப்பு, நூலாசிரியர்கள், உரைநடைப் பகுதிகள், தடை, சமயம் ஒழுக்கம்பற்றிய குறிப்புக்கள், பிறசெய்திகள் ஆகிய தலைப்புக்களில் ஆண்டுக் கூறியனவற்றில் பொருந்துவனவற்றை யெல்லாம் ஈண்டு அப்படியே இணைத்துக் கொள்ளலாம். அவற்றைத் தவிர துணைப்பாட நூல்கள் வேறு சில கூறுகளையும் கொண். டிருத்தல் இன்றியமையாததாகும்.

துணைப்பாட நூல்களில் மாணுக்கர்கள் அறியாத சொற்கள், சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், வேறு மொழி வடிவங்கள் முதலியவற்றைக் கையாளுதல் கூடாது. கருத்துணர்வதில் இவையும் நடையும் தடையாக இருத்தல்கூடாது. மானக்கர்கள் ஆசிரியரின் துணை சிறிதுமின்றி, வேண்டுமானுல் அகராதித் துணையுடன், நூல்களைத் தாமாகவே படித்து மகிழவேண்டும் ; படித்து முடித்தோம் என்ற வெற்றியுணர்ச்சி எளிதாகக் கைவரப்பெறுதல் வேண்டும்.

  • இந்நூல்-பக். (282-85)

த-39