பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 தமிழ் பயிற்றும் முறை

இத்தகைய நூல்கள் தமிழ்மொழியில் அதிகமாகத் தோன்றி வருகின்றன. ஆளுல், பெரும்பாலும் வகுப்புக்கு வைக்கப்பெறும் நூல்கள் மாணுக்கர்களின் அறிவு நிலையினை ஒட்டியனவாக இல்லாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. பாட நூற் குழுவினரால் ஏற்கப்பெற்ற நூல்களுள்ளும் ஒரு வகுப்புக்குரியனவாகவுள்ள நூல்கள் பல கூறுகளில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த நூலாசிரியர் ஐந்தாம் படிவத்திலும், எப். ஏ. வகுப்பிலும், புலவர் வகுப்பிலும் ஒரே நூலைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்ருர் என்ருல், நூல்களைத் தேர்ந்தெடுப்போர் எவ்வளவு கவனக் குறைவாக இருந்திருக்க வேண்டும், அல்லது சொல்லக்கூடாத காரணங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணவேண்டியுள்ளது.

நூல்கள் பல்வேறு துறைகளைப்பற்றிய செய்திகளைத் தருவனவாகவும் இருத்தல் வேண்டும். பாட நூல்களைக் குறிப்பிடும்பொழுது உரைநடைப் பகுதிகள் என்ற தலைப்பில் கூறப்பெற்ற பல கருத்துக்களேயும் துணேப்பாட நூல்களுக்கும் ஏற்றவையாகக் கொள்ளலாம். தமிழில் பிரயாண நூல்கள் குறைவாக உள்ளன. உலகம் சுற்றும் தமிழன்’, சித்பவாநந்த அடிகள், தி. சு. அவிநாசிலிங்கம், டாக்டர் மு. வரதராசளுர், சோம. இலக்குமணன் செட்டியார் (சோமலெ") எழுதியுள்ளவைபோல் இவைகள் சுவையாக எழுதப்பெற்ருல் மாணுக்கர்கள் அவற்றைக் கதை நூல்களைப் போலவே விரும்பிப் படிப்பர்.

துணைப்பாட நூல்களைப் பயிற்றும் முறை : துணைப்பாட நூல்களே ஆழ்ந்த படிப்பிற்குரிய பாடநூலைப்போல் வகுப்பில் கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படிக் கற்பித்தாலும், பொதுப் போக்காகக் கற்பித்தால் போதும். பாடநூலேக் கற்பிக்கும்பொழுது மேற்கொள்ளப்பெறும் அருஞ்சொல் விளக்கம், சொற்ருெடர் மரபுத்தொடர் விளக்கங்கள், அவற்றைச் சொந்த வாக்கியங்களில் வைத்துப் பயிற்றுவிக்கும் பன்முறைப் பயிற்சி, அரிய சொல்லாட்சி