பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 595

இலக்கணக்குறியீடு ஆகியவற்றின் விளக்கங்கள் போன்ற முறைகளே மேற்கொள்ள வேண்டியதில்லை.

துணைப்பாட நூல்களே மாணுக்கர்களே வீட்டில் படித்து வரவேண்டும்; துணைப்பாடப் படிப்புக்கென பாடவேளே ஒதுக்கப்பெற்றிருந்தால் அதில் அவர்கள் அந்நூல்களைப் படிக்கலாம். தேவையாளுல் அப்பாட வேளையில் ஆசிரியர் நூலிலுள்ள கதையை அல்லது பொருளேப்பற்றிப் பரந்த நோக்காக ஆராயலாம் ; கதை நடக்கும் காலம், இடம், சூழிநிலை, கதை மாந்தர்கள், துனே க்குறிப்புக்கள் ஆகியவற்றை முன்னுரையாக எடுத்துக்கூறி அந்நூலேப் படிப்பதில் மாளுக்கர்களிடையே ஆர்வத்தை எழுப்பிவிடலாம். நூலைப் படிக்கத் தொடங்குமுன் சிந்தனையைக் கவரக்கூடிய சில விளுக்களைத் தந்து அவற்றிற்கு விடை கண்டு வருமாறு ஏவலாம். அவ் விளுக்கள் இவ்வாறு அமையலாம்: கதைப் போக்கு, கதை மாந்தர்களின் குணநலன்கள், நிகழ்ச்சிக் குறிப்பு, வருணனே முதலியவற்றைப்பற்றிய சிறு குறிப்புக்கள் முதலியவை எழுதிவருமாறு ஏவலாம் ; அல்லது சிறு சிறு விளுக்கள் தந்து அவற்றிற்கு விடை காணுமாறு தூண்டலாம். புதிய முறை வினுக்களின் மூலமும் அவர்களுடைய படிப்பறிவை அளந்து காணலாம்.

வீட்டில் மரணுக்கர்கள் அந்நூல்களைப் படித்துவந்த பிறகு மேற்கண்ட விளுக்களே விடுத்து விடை கூறுமாறு ஏவலாம். இவ் விளுக்கள் யாவும் மானுக்கர்கள் கருத்துணர்ந்து படித்து வருகின்றனரா என்பதை அறிவதற்குத் துணைசெய்பவை. துணைப்பாட நூல்களில் படித்தறிந்தவற்றை ஒருசில தலைப்புக்களில் கட்டுரைகளாக வரைவதி. லும் பயிற்சிகள் தரலாம். கட்டுரை வரைவதற்கெனக் கூறப்பெற்ற விதிகளைப் பின்பற்றிக் கட்டுரை எழுதுதல் நடைபெறல்வேண்டும். கட்டுரை திருத்தும் முறைகளே மேற்கொண்டு அவற்றை ஆசிரியர் திருத்தவும் வேண்டும்.