பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 தமிழ் பயிற்றும் முறை

3. பொதுப்படிப்புக்குரிய நூல்கள்

நூலகப் படிப்புக்காகப் பாடநூற் குழுவினரால் ஏற்கப் பெற்ற பல உரைநடை நூல்களேப் பொதுப் படிப்புக்கான நூல்களாகக் கருதலாம். பெரும்பாலும் அவைகளும் துனைப் பாட நூல்களைப்போலவே எழுதப்பெற்றுள்ளன. இன்று. பதிப்பாளர்கள் நூலின் புறத்தோற்றத்தில் கவனம் செலுத்தி மேற் சட்டையுடன் நூல்களைப் பதிப்பிக்கின்றனரேயன்றி, நூல்களின் அகத்தோற்றத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்தவில்லை. அகத்தோற்றத்தில் கவனம் செலுத்தி ஒருசில ஆசிரியர்களால் எழுதப்பெற்ற நூல்களைப் பதிப்பாளர்கள் ஆதரிப்பதில்லை ; அவை அச்சுப்பொறி ஏறும் பேற்றைப் பெருமல் கிடக்கின்றன.

இந்த நூற்ருண்டில் பழைய முறையிலும் புதிய முறையிலும் பல உரைநடை நூல்கள் வெளி வந்துகொண். டிருக்கின்றன. இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், கால ஆராய்ச்சி நூல்கள், பல்வேறு பொருள்களைப்பற்றிய உரைநடை நூல்கள், இலக்கண ஆராய்ச்சி நூல்கள் ஆகியவை பழைய முறையில் வெளிவந்தவை. புதிய முறையில் பல மறுமலர்ச்சி இலக்கியங்கள் மேனுட்டு இலக்கிய வகைகஜா யொட்டி வெளிவந்துள்ளன ; நாடோறும் வெளிவந்து கொண்டுமிருக்கின்றன. பழைய முறையில் வெளிவந்தவற்றைப் புலமை மிக்கவர்கள் மட்டிலுந்தான் படித்து இன்புற முடியும். புதியமுறையில் வெளிவந்துள்ளவற்றைப் எல்லோரும் படித்துச் சுவைக்கலாம். புதிய முறையில் வெளிவருபவை இரண்டு வகைகளில் வளர்கின்றன. முதல் வகை நூல்களில் சிறுகதைச் செல்வங்கள், புதினங்கள், கட்டுரைகள், திறய்ைவு நூல்கள் போன்ற மேனுட்டு உரைநடை இலக்கிய வகைகளைச் சேர்ந்தவற்றைக் குறிப்பிட லாம். இவற்ருல் தமிழ் உரைநடைச் செல்வம் வளர்கின். றது என்று சொல்லவேண்டும். இரண்டாவது வகையில் செய்தித்தாள்கள், வார பிறை, திங்கள், ஆண்டு இதழ். களைக் குறிப்பிடலாம். செய்தித்தாள் ஆசிரியர்கள், பேசுவதுபோலவே எழுதவேண்டும் என்ற எண்ணத்தால்