பள்ளிக்குரிய நூல்கள் 597
எழுதுகின்றனர். முதல்வகை இலக்கியங்கள் கற்றவர்கவரிடையேயும், இரண்டாவது வகை எல்லோரிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளன. பாமரமக்களும் சிறுவர் சிறுமிகளும் இரண்டாவது வகை இலக்கியங்களைப் பெரிதும் விரும்புகின் றனர். இந்த இருவகை இலக்கியங்களும் ஏற்கப்பெற்ருலும் பெருவிட்டாலும் பள்ளி மாணுக்கர்கள் அவற்றைப் படித்து மனப்பசியைத் தணித்துக் கொள்ளுகின்றனர். நீண்ட நாட்களாக மக்கள் எதிர்நோக்கியிருந்த வேகமான நடை சிறுவர்களின் இதயங்களைக் கெளவி நிற்கின்றது ; வளர்ந்: தவர்களும் அந் நடையில் விருப்பங் கொள்ளுகின்றனர். அந்த இலக்கியங்கள் அவர்களின் சிந்தைக்குரிய பெருவிருந்தாக உள்ள்ன. பாடநூல்கள், துணேப்பாட நூல்கள், நூலகப் படிப்பிற்குரிய நூல்கள் ஆகியவற்றை விரும்பாத மாணுக்கர்களும் இந்நூல்களைப் பெரு விருப்புடின் படித்து இன்பமுறுகின்றனர்.
மறுமலர்ச்சி இலக்கியங்களில் முக்கியமானவை புதினங் கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திறய்ைவு நூல்கள் ஆகியவையாகும். இவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு ஒரு சிறிது நோக்குவோம்.
புதினங்கள் : புதினம் மேனுட்டு இலக்கிய வகைகளில் ஒன்று. தன்னுடைய ஒவியத்தைத் தானே பார்த்து மகிழும் இயல்பு மனிதனுக்கு உண்டு. தன் இயற்கை, தான் வாழும் வாழ்க்கை இவைகளின் வேறுபாடுகளை மனிதன் இலக்கியங்களில் கண்டு துய்க்க விரும்புகின்றன். எனவே, மக்கள் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள் போராட்டங்கள் முதலியவையே இப் புதினங்களின் பொருள்களாக அமைகின்றன : அவை தோன்றும் நிலைக்களன்களாகவும் உள்ளன. புதினம் ஒரு பெரிய கதை. ஒருவருக்கொருவர் தொடர்புள்ள பல கதை மாந்தர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் பகுதியை முழு விவரங்களுடன் தரும் ஒவியம் இது. புதினத்திற்கு இன்றியமையாத சில உறுப்புக்கள் உள. கதையமைப்பு (Plot), கதை மாந்தரின் படைப்பு (Characterisation), 2-oofurl-5b (Dialogue), širājih (Time)