பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 60 f

நாடகங்கள் : ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதில் வரும் கதைமாந்தர்கட்கெல்லாம் நடிகர்களே அமைத்து உரையாடல்களாலும் செயல்களாலும் அக்கதைப் பொருளைப் பலர் காண அரங்கத்தில் நடித்துக்காட்டுவதை நாடகம் என்று இக்காலத்தில் நாம் கூறுகின்ருேம். முத்தமிழில் ஒன்ரு கிய நாடகத்தமிழ்பற்றிய பண்டைய இலக்கியங்கள் தமிழ் மொழியில் இன்று காணப்பெறவில்லை ; அவை எப்படியோ அழிந்துபட்டன. 'நாடகம் என்பதற்கு நச்சிர்ைக்கினியர் புன்ந்துரைவகை என்று பொருள் விரித்தனர். இளம்பூரணரும் இப் பொருளினேயே பிறிதொரு வகையால் கூறினர். ஆங்கிலத்தில் படித்தற்கும் நடித்தற்கும் உரிய பல நாடக நூல்கள் இருப்பதுபோல் தமிழ்மொழியில் இன்னும் அதிகமாகத் தோன்றவில்லை. இன்று மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எழுதிவரும் நாடகங்கள் நிலைதிது நிற்கும் தன்மை வாய்ந்தவை அன்று.

இடைக்காலத்தில் கோவில்கள், நாடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன. முதல் இராஜராஜன் காலத்தில் இராஜ ராஜேசுவர நாடகம்' என்ற பெயரால் ஆண்டுதோறும் ஒரு நாடகம் நடிக்கப்பெற்று வந்ததாகக் கல்வெட்டு ஒன்ருல் அறிகின்ருேம். இத்தகைய ஒரு சில செய்திகளால் கி. பி. பத்தாம் நூற்றண்டளவில் தமிழ் நாடகங்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கின்றது. மேற் கூறியவாறு சில நாடகங்கள் தோன்றினும் இவ்வகை நூல்கள் தமிழ்நாட்டில் செழித்து வளரவில்லை. பாட்டியல் நூல்களிலும் உழத்திப்பாட்டு (பள்ளு), குறத்திப்பாட்டு (குறவஞ்சி), நொண்டி நாடகம் என்ற மூன்று தவிர வேறு நாடக நூல்கள் காணப்படவில்லை. இவை கி. பி. 17-ஆம் நூற்ருண்டில் தோன்றியவை.

பத்தொன்பதாம் நூற்ருண்டில் மேனுட்டுக் கல்வி நாட்டில் பரவத் தொடங்கியது. ஆங்கிலம் கற்ற ஒரு சிலர் வடமொழி நாடக இலக்கணங்களேயும் முறைகளையும்

" தொல்-பொருள். நூற் 53-இன் உரை. * S. I. {. II p. 306; 120 of 1931.