பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 605。

4. தகவல் நூல்கள்

வளர்ந்தவர்கள் படிப்பதற்கும் குழந்தைகள் படிப்ப தற்கும் ஏற்ற தகவல் நூல்கள் தமிழ் மொழியில் இன்னும் அதிகமாகத் தோன்றவில்லை ; இந்திய மொழிகளிலேயே இன்னும் அதிகம் தோன்றவில்லை என்று கூடக் கூறலாம்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் ;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.

என்று பாரதியாரும் மேனுட்டு மொழிகளிலிருந்து பல நூல்களே மொழி பெயர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு சில நல்ல நூல்கள் இப்பொழுதுதான் தோன்றத் தொடங்கியுள்ளன. பள்ளி மாணுக்கர்களுக்கென அவீர்களின் பருவ நிலைக்கேற்றவாறு பெளதிக இயல், உயிரியல், தாவர இயல், வேதியியல், வானியல், நிலவியல், நிலஉட்கூற்றியல், உட6ôu J5ö Ĝı ıfr5ör jo ĝi6pp&56f6ö Basic Science series, ' Wonder book series என்ற தொடர்களில் இனிய, எளிய, தெளிவான ஆங்கில மொழியில் எழுதப்பெற்றுள்ள நூல்களைப்போல் தமிழ் மொழியில் பல நூல்கள் தோன்றுதல்வேண்டும். இன்னும் ஆங்கில மொழியில் வெளியாகியுள்ள பல்வேறு தகவல் நூல்களைப்போல் தமிழ் மொழியிலும் வெளிவருதல் வேண்டும். கலேக் களஞ்சியம் ' என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ள நூல் அருமையான தகவல் நூல் : உயரிய முறையில் மேற்கோள் நூலாகத் துணைசெய்வது. தமிழ் வளர்ச்சிக் கழகம் செய்துள்ள இச்சீரிய பணி தமிழ் மக்களால் என்றென்றும் பாராட்டுதற்குரியது.

இன்று தமிழ் மக்களிடம் தகவல்களேத் தரும் நூல்: களாகப் பழக்கத்திலிருப்பவை பஞ்சாங்கம், புகைவண்டிக் கால அட்டவணை, ஒருசில தமிழ் அகராதிகள், தமிழ் லெக். ஸிகன், அபிதான சிந்தாமணி ஆகியவையே. அகராதிகளும் தேவைக்கேற்றவாறு இன்னும் அதிகமாகத் தோன்ற.