உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O 6 தமிழ் பயிற்றும் முறை

வில்லை. தாய்மொழியில் வரலாறு, சமூகம், தரை நூல், கணிதம் முதலிய பாடங்களைப் பயின்று உயர்நிலக் கல்வியை முடித்துக்கொண்ட மாணுக்கர்கள் பள்ளிகளே விட்டு வெளியேறியதும் மேலும் அத் துறைகளில் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினுல் தாய்மொழியில் அத் துறைகளில் தக்க நூல்கள் இல்லை. கிடைக்கும் ஒன்றிரண்டு நூல்களும் நல்ல நடையில் உற்சாகம் ஊட்டும் முறையில் எழுதப் பெறவில்லை. கல்வி முடிந்ததும் தமிழில் எழுதப்பெற்ற இத் துறை நூல்களே மாணுக்கர்கள் விருப்பத்துடன் பார்ப்பதே இல்லை. பல துறைகளில் எவரும் விரும்பிப் படிக்கும் முறையில் நல்ல நடையில் ஏராளமான நூல்கள் இனித் தோன்றுதல்வேண்டும். தாய்மொழியில் நல்ல தகவல் நூல்கள் இல்லை என்பதை உயர்நிலைக் கல்வி அறிக்கையும் குறிப்பிட்டுள்ளது. அறிஞர்கள் அத் துறைகளில் ஆக்க வேலைகள்' செய்யவேண்டும்: பதிப்பாளர்கள் அவைகளே அழகிய முறிையில் அச்சிட முன்வரவேண்டும். நெசவுத் தொழில், மரவேலை, உலோக வேலே, பின்னல் வேலை, தோட்ட வேலே போன்ற விருப்பச் செயல்கள் (Holies) பற்றிய நூல்கள் தமிழ் மொழியில் இன்னும் தோன்றவில்லை. வார்தா கல்வித் திட்டம் ஒரிரண்டு இடங்களில் செயற்பட்டிருப்பதாலும், 'அடிப்படைக் கல்வித்திட்டம் நடை முறைக்கு வந்துவிட்டதாலும், குடிசைத் தொழில் வளர்ச்சி. யைப்பற்றிப் பலர் அக்கறை கொள்வதாலும் தேனி வளர்த்தல், காகிதம்செய்தல், சோப்பு செய்தல் போன்ற தொழில்களேப்பற்றிய ஒன்றிரண்டு நூல்கள் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. இவை எளியமுறையில் எழுதப்பெற்றுள்ளன. இப் புத்தகங்களே தொடக்கம் முதல் இறுதிவரை படிக்க வேண்டியதில்லை. தேவைக் கேற்றவாறு சந்தர்ப்பம் நேரிடும்பொழுது சிலபகுதிகளேப் படித்துக்கொண்டால் போதுமானது.

  • Report of Secondary Education Commission pp. II6, II?.