பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 6 O7

5. பயிற்சிக் குறிப்பேடுகள்

தாய்மொழியில் பல பயிற்சிக் குறிப்பேடுகள் வெளி வந்துள்ளன. கணிதம், சமூக இயல், தரை இயல் போன்ற பாடங்களில் பல பயிற்சிக் குறிப்பேடுகள் வெளிவந்திருப்பதைக் காண்கின்ருேம். மேல்நாடுகளில் இப்பாடங்களி லுள்ள பயிற்சிகள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆளுல், நம் நாட்டில் ஒருசில ஆசிரியர்களால் எழுதப்பெற்றவையே பல பதிப்புகளில் வெளியாகி வருகின்றன ; புதிதாக ஒருவரும் இத்துறைகளில் எழுதவில்லை. தமிழ்ப்பயிற்சிக்கென ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ்ாரால் "புதுமுறைத் தமிழ் அப்பியாசங்கள்” என்ற பெயருடன் மூன்று, நான்கு, ஐந்து, வகுப்புகளுக்கு ஒரு வரிசை ஏடுகள் வெளியிடப்பெற்றுள்ளன. இவற்றைத் தவிர வேறு பயிற்சிக் குறிப்பேடுகள் இதுகாறும் வெளிவத்ததாகத் தெரியவில்லை. ஆங்கில மொழிப் பயிற்சிக்கென சீட் வொர்க், "டெஸ்க் வொர்க்’, பிறபயிற்சிகள் என்று வெளி வந்துள்ள மொழிப் பயிற்சிக் குறிப்பேடுகள் போன்றவை தமிழ்மொழியில் வெளிவருதல்வேண்டும். சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கென வெளிவரும் பருவ வெளியீடுகளிலும், பிற வெளியீடுகளில் சிறுவர்க்கென ஒதுக்கப்பெற்றுள்ள பகுதியிலும் விடுகதைகள் போன்ற ஒருசில மொழிப் பயிற்சிகள் வெளியிடப்பெறுகின்றன. அவை பொழுதுபோக்குக்காகவும், முதலில் பார்ப்பவர்கட்குச் சிறிது தடுமாற்றத்தை உண்டுபண்ணுவதற்காகவும் உதவுபவை. ஒருசில குறுக்குச் சொற்போட்டிகள் இத்தகையவை.

இதுகாறும் இலக்கணப் பாடநூல்களில் காணப்பெறும் ஒருசில பயிற்சிகள் மொழிப் பயிற்சிகளாகக் கருதப் பெற்றன. இலக்கண விதிகளையும் நூற்பாக்களையும் மனப். பாடம் செய்வதனலும் ஒருசில இலக்கணப் பயிற்சிகளைச் செய்வதனுலும் மொழிப் பயிற்சி தானுக ஏற்படும் என்ற தவருண எண்ணம் நிலவியது. ஆளுல், இலக்கணப் பயிற்சி வேறு, மொழிப் பயிற்சி வேறு என்பதை மிக அண்மையில்