பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 தமிழ் பயிற்றும் முறை

தான் கல்வியாளர்கள் உணர்ந்தனர். பொருளறிவுடன் செய்யும் பயிற்சிகளும், பல்வேறு மொழி வடிவங்களில் செய்யும் பயிற்சிகளும் ஆங்கில மொழியிலுள்ளவைபோல் தமிழிலும் செய்யப் பெறுதல் வேண்டும் என்ற இன்றி. யமையாமையை உணர்ந்தனர்.'" இன்னும் அம்முறை. யில் பல நூல்கள் வெளி வரவில்லே. பள்ளிப் பாடத்திட்டத்தையொட்டி வெளிவந்துள்ள நூல்களேத் தவிர 'உயர்தரக் கட்டுரை இலக்கணம்’ என்ற தலைப்பில் ஒரு நூல் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளது.1 SlS Gly sör SNYíð lorflt- lagið (Wren and Martin) SN&^^rÆதியற்றிய ஆங்கில இலக்கண நூலேத் தழுவி எழுதப்பெற்றுள்ளது. இதுபோன்ற பல நூல் தமிழ் மொழியில் வெளிவருதல் வேண்டும். தமிழாசிரியர்கள் இத்துறையில் ஆற்றவேண்டிய பணி மிக்குள்ளது.

பாடநூல்களேத் தவிர ஏனைய நூல்கள் பள்ளியில் ஓர் ஒழுங்கில் சேமித்து வைக்கப் பெற்றிருக்கும் இடம் பள்ளி நூலகமாகும். இன்று நாடோறும் வெளிவரும் செய்தித் தாள்கள், பருவ வெளியீடுகள்'முதலியனவற்றைப் படிக்க வசதியாக அமைக்கப்பெற்றுள்ள மற்ருேர் இடம் நூலகத் துடன் இணைந்துள்ள படிப்பகமாகும். பள்ளிகளில் இவை: இரண்டும் எவ்வாறு செயற்படுகின்றன ? மொழிப் படிப்பிற்கு இவை எவ்வாறு துணைபுரிகின்றன? என்பவற்றைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுதல்வேண்டும். எனவே, இந்த இரண்டு நிலையங்களைப்பற்றி ஓரளவு ஈண்டு அறிந்து கொள்ளுவோம்.

நூலகம் : நூலகத்தின் இன்றியமையாமையை இன்று: மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். நூலகக் கழகங்கள் மாவட்டங்கள் தோறும் நிறுவப்பெற்றுப் பல்வேறு இடங்ஆளில் நூலகங்களைத் தோற்றுவித்துள்ளன.

விரிவை மொழிப் பயிற்சிகள்’ என்ற தலைப்பில் காண்க. பக்கம்-351.

  • கழக வெளியீடு.