பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 609

மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்

மளுேபாவம் வானைப்போல் விரிவடைந்து தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்

சக மக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும், இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம் இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை : புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்

புத்தகசா லவேண்டும் நாட்டில் யாண்டும்.' என்ற கவிஞன் குரல் எம்மருங்கும் கேட்கப் பெற்றுச் செயற் படத் தொடங்கியுள்ளது. உயர் நிலைக் கல்வி அறிக்கையும் நூலகத்தின் இன்றியமையாமைபற்றிக் குறிப்பிட்டுள்ளது.* இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளில் நூலகம் நல்ல முறையில் அமைந்து மாணுக்கரின் மொழியறிவினையும் பொருளறிவினையும் வளர்க்கவேண்டும். அவ்வப்பொழுது புதிதாக வெளிவரும் வார இதழ்கள், பிறை இதழ்கள், திங்கள் இதழ்கள், ஆண்டிதழ்கள், வேறு சிறப்பிதழ்கள் ஆகியவற்றையும், தாய்மொழியில் பல்வேறு துறைகளில் வெளிவரும் நூல்களேயும் மாணுக்கர்கட்குக் கிட்டும்படி செய்து இவற்றை வளர்க்கலாம்.

நூலகம்-வகைகள் : சாதாரணமாகப் பள்ளி நூலகத்தில் பொது நூலகம், மேற்கோள் நூலகம், வகுப்பு நூலகம் என்று முப்பிரிவுகள் இருக்கும் ; இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தால்தான் சீரிய முறையில் நூலகம் எல்லோருக்கும் பயன்படும். பொது நூலகத்தில் எல்லா வகுப்பு மாணுக்கர்களும், ஆசிரியர்களும் படிக்கக்கூடிய பல கலைகள்பற்றிய நூல்கள் இருக்கும். மேற்கோள் நூலகத்தில் பொது அகராதிகள், கலைச்சொல் அகராதிகள், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்க அகராதிகள், தமிழ்ப் பேரகராதி, கலைக்களஞ்சியங் கள், அபிதான சிந்தாமணி, நிகண்டுகள், சங்க இலக்கி; யங்கள், புராணங்கள், இலக்கண நூல்கள் ஆகியவை

  • பாரதிதாசன் : கவிதைகள் - முதற்பகுதி. ** Report of the Secondary Education Commission pp. II6-123. த-40