பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 i G தமிழ் பயிற்றும் முறை

இருக்கும். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழர் நேசன், கலைமகள், அமுதசுரபி, கலைக்கதிர், அணுக் கதிர், தருமசக்கரம் முதலியவற்றின் கழிந்த ஆண்டுத் தொகுதிகள் இருத்தல் அவசியம். சிறுவர்க்கு விருப்பத்தைத் தரும் கண்கவர் ஓவியங்களைக் கொண்ட அறிவு வளர்க்கும் நூல்களும், புகைவண்டி வழி காட்டிகள், பஞ்சாங்கங்கள், வேறு அட்டவணே நூல்கள், ஆண்டு நூல்கள் (Year books) ஆகியவற்றிற்கும் இங்கு இடம் அளிக்கலாம். வகுப்பு நூலகத்தில் ஒவ்வொரு வகுப்பிற்குமுரிய நூல்களைப் பிரித்துத் தனித்தனியாக வைத்தல்வேண்டும். அந்நூல்களே மாணுக்கர்கள் வாங்கவும் திருப்பிக் கொடுக்கவும் ஏற்ற வசதிகள் இருத்தல்வேண்டும். அதற்கென ஒவ்வொரு வகுப் பிற்கும் பேரேடுகளே (Catalogues) வைத்து அவற்றில் கொடுக்கல் வாங்கல்களைத் தேதிவாரியாகப் பதிந்துக்கொள். ளலாம்., முதல் இரண்டு பிரிவுகளும் நூலகக் கண்காணி யாரின் பார்வையிலும், மூன்ருவது பிரிவு அந்தந்த வகுப்பு ஆசிரியரின் பார்வையிலும் இருந்தால் செயல் எளிதாகவும் திறமையாகவும் நடைபெறும். மாற்றியமைக்கப்பெற்ற உயர்நிலைக் கல்வித்திட்டத்தில் தாய்மொழிப் பாடத் திட்டத் தில் 1, 2, 3 படிவங்களுக்கு வாரத்திற்கு ஒரு பாடவேளே. யும், 4, 5, 6 படிவங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு பாடவேளேயும் ஒதுக்கப்பெற்றிருப்பதால் வகுப்பு ஆசிரியர்கள் வகுப்பு நூலகத்தின் பொறுப்பை ஏற்ருல்தான் நூலகப்படிப்பு திறமையாக நடைபெற இயலும்.

இவ்விடத்தில் உயர் நிலைக் கல்வி அறிக்கை நூலகத்தைப்பற்றிக் குறிப்பிடும் செய்திகளே நினைவுகூர்தல் மிகவும் பொருத்தமாக இருக்கும். நூலகத்திற்குரிய கட்டடம் மிக அழகானதாக அமைதல்வேண்டும். காற்ருேட்டமுள்ள தாகவும் போதுமான வெளிச்சத்தை யுள்ளதாகவும் அமைந்த இடம் ஏற்றது. நூலகத்தில் பல பெரியார்கள், அறிஞர்களின் படங்களை வைத்தல் வேண்டும் ; அறையில்

    • Report of the Secondary Education Commission pp. II7-18.