பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 6 # 3

ஆண்டின் இறுதியில் தேவையான நூற்பட்டியலை ஆயத்தம் செய்யும்பொழுது அதில் இவற்றைச் சேர்த்தல்வேண்டும். இன்று அறிவு வளர்ச்சிபற்றிய நூல்கள், கலைகள்பற்றிய ஆால்கள், அறிவியல் துறை நூல்கள் முதலியவை எத்தனேயோ தாய்மொழியில் வெளிவந்தவண்ண மிருக்கின்றன. ஆசிரியர்கள் அவற்றைப் படித்துப் பரிசீலனை செய்து ஏற்றவற்றை வாங்கவேண்டிய பட்டியலில் சேர்க்கவேண்டும்.

படிப்பில் ஆர்வத்தை ஊட்டும் முறை : பள்ளிப் பாட வேளேத் திட்டத்தில் நூலகப்படிப்பிற்காக ஒதுக்கப்பெற்பெற்றுள்ள நேரத்திலும் பிற சமயங்களிலும் ஆசிரியர்கள் மாணுக்கர்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஊட்டுதலே முதற்கடமையாகக் கொள்ள வேண்டும் ; முதலாய கடமையும் அதுதான். பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணுக்கர்களிடம் அவர்கள் படிக்கும் நூல்களில் காணிக்கிடக்கும் முக்கியமான சொற்ருெடர்களையும், (Phrase) மரபுத்தொடர் களையும் புத்தகத்தில் படிக்கும் பொருள்களையும்பற்றிச் சுருக்கமாக எழுதும்படி கொல்லி அவர்களிடம் இயல்பாகத் தோன்றும் படிக்கும் ஆர்வத்தை வேரிலேயே சிதைத்து விடுகின்றனர். ஜார்ஜ் ஸ்ாம்ஸன் என்ற அறிஞர், "இலக்கிய மங்கை பள்ளி ஆசிரியர்களின் கையிலும் தேர்வாளர்களின் கையிலும் சிக்குவது அவளது போதாக் காலமே ; அவளது அழகையும் பொலிவையும் விட அவள் தரும் சீதனத்தையே முக்கியமாகக் கருதும் பேர்வழிகள் அவர்கள்” என்று கூறிச் சென்றதை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நூல்களைப் படித்து மாணுக்கர்கள் படிப்பதில் ஒரு சுவையையும் இன்றியமையாமையையும் தம்மிடையே வளர்த்துக்கொள்ளுகிறவரை ஆசிரியர்கள் இம்மாதிரியான வேலைகளை அவர்களுக்கிடக்கூடாது, அவை வளர்ந்தால் இத்தகைய வேலைகளே ஆசிரியர்கள் அவர்களுக்குத் 莎下

    • “It is the sorry fate of literature to fall into the hands of school masters and examiners who care for her dowry more than för her charms"-Literature in the Class Room by George Sampson.