பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 i 4 தமிழ் பயிற்றும் முறை

வேண்டிய இன்றியமையாமையும் இல்லை. அவர்களுக்கே என்ன செய்யவேண்டும் என்பது தாளுகப் புலப்படும். இந்த உண்மையை அறிந்து ஆசிரியர்கள் ஏற்றவற்றைச் செய்யவேண்டும்.

நூலகப் படிப்பை மேற்கொள்ளும் முறை : இவ்விடத்தில் நூலகப் பாட வேளையில் தம்மிடம் வரும் மாளுக்கர்களுக்கு ஆசிரியர் எவ்வாறு அந் நேரத்தைப் பயன் பெறும் வகையில் செலவிட வழிகாட்டவேண்டும் என்பதைப்பற்றி ஒரு சிறிது கவனித்தல் பொருத்தமே. பயிற்று முறைகளை ஆராய்ந்தபொழுது மேற் பார்வைப் படிப்பு’ என்ற ஒரு முறையைக் குறிப்பிட்டோம் அன்ருே ?' ஆங்குக் கூறப்பட்டுள்ள சில சிறந்த கூறுகளைக் கையாண்டு நூலகப் படிப்பைப் பயனுறும்படி செய்யலாம். அவற்றுட் சிலவற்றை ஈண்டு எடுத்துக் கூறுவோம்.

இந்நூலக வகுப்பில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்ற நூல்களே மாளுக்கர்களிடம் எடுத்துக் கொடுத்து அவர்களே வாய்க்குட் படிக்குமாறு செய்யவேண்டும். ஒரு நூலுக்குப் பல படிகள் இருக்குமாயின் வகுப்பைச் சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவுக்கு ஒரு நூலையும், மற்ருெரு பிரிவுக்கு மற்ருெரு நூலையும் கொடுத்துப் பின்னர் அவற்றை மாற்றிக்கொள்ளும்படி செய்யலாம். கீழ் வகுப்புக்களில் மானுக்கர்கள் விரும்பும் நூல்களைக் கொடுக்கவேண்டுமேயன்றி சில நூல்களேக் கொடுத்து அவற்றைத்தான் படிக்கவேண். டும் என்று வற்புறுத்துதல் படிப்பதில் உள்ள சுவையையே சிதைத்துவிடும். மேல் வகுப்புக்களில் ஆசிரியர்கள், மானுக்கர்கள் படிக்கவேண்டும் என்று தாம் கருதும் நூல்களைப் படிக்குமாறு துரண்டலாம்.

பொது வகுப்பில் கற்பிக்கும்பொழுது இன்ன செய்திகளே இன்ன மேற்கோள் நூலில் காணலாம் என்று கூறி யிருந்தால் அந்த நூலில் செய்திகளைக் காணும்படி வழி காட்டலாம். நூலகத்தில் நூல்களைப் படிக்கும்பொழுது

இந்நூல் பக்கம்-152.