பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் 6 1 7

வற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கி மாணுக்கர்களுக்கு அவை. களைப் படிக்கும் வாய்ப்பினை அளித்தல்வேண்டும். இதற்கு அமைதி நிலவக்கூடிய அறையொன்று இருக்கை வசதிகளுடன் இருக்கவேண்டும். இதன் பொறுப்பை நூலகக் கண்காணிப்பாளர் ஏற்கவேண்டும். இதில் மானக்கர்கள் அமைதியுடனிருந்து செய்தித் தாள்களையும் பிறவற்றையும் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். பள்ளி மாணுக்கத் தலைவனும் வகுப்பு மாணுக்கத் தலைவர் களும் நூலகக் கண்காணிப்பாளருடன் ஒத்துழைத்து இவ்வறையில் நல்ல அமைதியை நிலவச் செய்யலாம். படிக்கும் தாள்களே வைத்துப் போற்றும் உணர்ச்சி ஒவ்வொருவரிடமும் வளரவேண்டும்.

நூலகத்தையும் படிப்பகத்தையும் சிறந்த முறையில் அமைத்துச் செயற்படச் செய்தால் தாய்மொழிப் பயிற்சியில் அவற்றைத் திறம்படவும் பயனுறவும் கையிாளலாம். தாய் மொழியாசிரியர்கள் இந்த இரண்டு சாதனங்களையும் தக்க முறைகளில் பயன்படுத்திக், கொள்ளவேண்டும். நூல்களில் முகவுரையில் சொல்லக்கூடிய செய்திகள், பாடங்கள் பற்றிய ஆசிரியர்க்குரிய குறிப்புக்கள், ஆசிரியர்க்குரிய பிறதேவைகள் ஆகியவை பாடநூல்களில் இடம் பெறுதல் தவறு. இவற்றை ஆசிரியர் நூல் என்ற தனிச் சிறு நூலாகவோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளியிட வேண்டும்.

குழந்தைகளுக் கெனவும் சிறுவர் சிறுமியர்களுக் கென வும் ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகளும் பருவ வெளியீடுகளும் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. தொடக்க நிலைப் பள்ளிகளிலும் ஒரு படிப்பகத்தை ஏற்படுத்தி இவை அனைவருக்கும் கிட்டும்படி செய்தல்வேண்டும். இவ்வாறு செய்தால், எத்தனையோ ஏழைக் குடும்பங்களிலிருந்து வழம் குழந்தைகள் அவற்றைப் படித்துப் பயனடைய்க் கூடும். இன்று பல உயர்நிலைப் பள்ளிகளில் பெயரளவில் படிப்பகம்’ என ஒன்று உள்ளது ; பல பள்ளிகளில் பெயரளவில்கூட படிப்பகம் இல்லை. பல கல்லூரிகளில் இந்நிலையே நிலவுகின்றது. இந்த நிலை விரைவில் மாறவேண்டும்.