பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கல்வித்துறை அளவியல்

கல்வித்துறைச் சோதனைகள் : குழந்தைகள் பள்ளிகளி. லும் பள்ளிகளுக்கு வெளியிலும் கற்றவற்றை அளந்தறியப் பயன்படுத்தும் சோதனைகளைக் கல்வித்துறைச் சோதனைகள் (Educational tests) Srđrg), Öğrışl-sorib. sabãňufféssir கற்பித்தலால் குழந்தைகள் அறிந்து கொண்டவற்றையும், வகுப்பறை, பள்ளி அனுபவங்களால் அறிந்து கொண்ட வற்றையும், பள்ளிக்கு வெளியில் பெறும் அனுபவங்களால் அறிந்து கொண்டவற்றையும் தனித்தனியாகப் பிரித்து அறி. வதும் ஒவ்வொரு வகையிலும் அறிந்துகொண்டது எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அறிவதும் இயலாத செயல். எனவே, எல்லாத் துறைகளிலும் கற்றவற்றை ஒரு சேரத்தான் அறிந்துகொள்ள இயலும். சாதாரணமாகக் கல்வித்துறையில் மூவகைச் சோதனேகள் நடைமுறையிலுள்ளன. அவை: (1) வாய்மொழிச் சோதனைகள் ; (2) கட்டுரைச் சோதனைகள் ; (3) புறவயத் தேர்வுகள் (Objective examinations). மூன் ருவது வகையில் இருபிரிவுகள் உள் ளன. ஒன்று, தரப்படுத்திய சோதனைகள். பிறிதொன்று, தரப்படுத் தாத சோதனைகள் அல்லது புது முறைச் சோதனைகள். இவை ஒவ்வொன்றையும்பற்றி ஒரு சிறிது விரிவாக ஆராய்வோம்.

1. வாய்மொழிச் சோதனைகள்

மாளுக்கர்கள் கற்றவற்றை அளந்தறிவதற்குச் சாதாரணமாக வாய்மொழிச் சோதனைகள் மேற்கொள்ளப்பெறுகின்றன. ஆளுல், இவற்ருல் அளந்தறியும் முடிவுகளைச் சரியானவை என்று சொல்ல முடியாது. வகுப்பிற்கு ஐந்தாறு மாணுக்கர்கள் இருந்தால் இவற்றைக் கையாள முடியும்,