பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 6 19:

இன்றுள்ளதுபோல் வகுப்பிற்கு நாற்பது அல்லது ஐம்பது மாணுக்கர்களிருந்தால் வாய்மொழிச் சோதனைகளைக் குறுகிய காலத்தில் எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள முடியும் ? மாளுக்கர்கள் கூறும் விடைகளேயும் அவசர அவசரமாக மதிப்பிட வேண்டியுள்ளது. அவற்றைச் சரியா தவரு. என்று நிதானித்துப் பார்ப்பதற்குக்கூட நேரம் இராது. தவிர, ஒவ்வொரு மாணுக்கனும் அறிந்துள்ளவற்றைச் சாதாரணமாக ஒவ்வொருவனுக்கும் வாய்க்கக் கூடிய மூன்று அல்லது நான்கு விளுக்களைக்கொண்டு அளந்தறிவது சிறிதும் பொருத்தமன்று. இந்த மூன்று அல்லது நான்கு வினுக்களிலும் ஒன்றிரண்டு கடினமாக அமைந்தாலும், அல்லது அவற்றின் விடைகளே அவன் அறியாவிடினும் அவன் சோதனையில் தவறக் கூடுமல்லவா? இதனுல் அவனே ஒன்றும் அறியாதவன் என்று முடிவு கட்டுவது பொருந்துமா? எனவே, சிந்தனையின் காரணமாக விடையிறுக்கக் கூடிய வினுக்களைக் கையாளுவதற்கு இம்முறை சிறிதும் பொருந்தாது. தவிர, மாணுக்கர்கட்கும் ஆழ்ந்து அறுதியிட்டு விடையிறுப்பதற்கு வேண்டிய காலத்தையும் தர இயலாது. எனவே, வாய்மொழி விளுக்களே அளவு கருவியாகக் கொள்வதைவிட கற்பிக்கும் உபாயமாகக் கொள்வதே ஏற்புடைத்து என்று கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர். ஆகவே, வாய்மொழி விளுக்கள் இன்றைய நவீன அளவியலில் இடம் பெறவில்லை.

2. கட்டுரைச் சோதனைகள்

கட்டுரைச் சோதனையை நாம் நன்கு அறிவோம். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவது : மூன்று அல்லது இரண்டரை மணிக்கால அளவில் ஐந்து அல்லது ஆறு விளுக்களைக் கேட்டு ஒரு பாட முழுவதிலும் மாளுக்கனுக்கு இருக்கவேண்டிய ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று ஆண்டு அறிவை அளந்து அறிய முயல்கின்றது இந்தச் சோதனே. புதுமுறைச் சோதனைகள் செல்வாக்குப் பெற்ற பிறகு இதன் செல்வாக்கு குறையத்