பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் பயிற்றும் முறை

நிறுத்தற்குறிகளே இடுதல் போன்ற கூறுகளும் ஒரு கட்டுரையின் தரத்தை அறுதியிடுவதற்கு மேற்கொள்ளப் பெறுகின்றன. இன்னும் வேறு குறைகளும் உள்ளன. அவற்றை அறிஞர்கள் எழுதிய அளவியல் நூல்களில் கண்டு கொள்க. -

நிறைகள் : இனி, இச் சோதனைகளால் நிறைகளே இல்லாமல் இல்லை. முக்கியமானவற்றை மட்டிலும் ஈண்டு கூறுவோம்.

(1) இவ்வகைச் சோதனைகளே ஆயத்தம் செய்வதும் எளிது ; கையாளுவதும் எளிது. இச்சோதனைகளின் விளுக்களின் இயல்புகளை ஆசிரியர்கள் நன்கு அறிவர் ; அவற்றிற்கு விடையிறுப்பதையும் மாளுக்கர்கள் நன்கு அறிவர். விளுக்களுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதைப்பற்றி மானுக் கர்கட்கு விளக்கத்தேவையே இல்லை.

(2) பள்ளிக் கல்வித் திட்டத்திலுள்ள எல்லாப் பாடங்களுக்கும் இம்முறை ஆய்வுகளே எளிதாகக் கையாளலாம். கணக்கறிவுத்திறன், கையெழுத்துத் திறன், படிப்புத் திறன் போன்றவற்றை இவ் வாய்வுகளால் அளந்தறிய இயலாவிடினும், வேறு துறைகளில் அவை பெரிதும் பயன்படுகின்றன.

(3) பொருள்களின் வரையறைவுகள் கூறுவது, தெளிபடுத்திக் காட்டுவது, தொகுப்பது, வகுப்பது, விரிப்பது, சுருக்குவது முதலிய திறன்களே யெல்லாம் இவ்வகை ஆய்வுகளால்தான் அளந்தறிய இயலும். உயர்நிலை வகுப்பு மானுக்கர்கட்கு, முக்கியமாகக் கல்லூரி பல்கலைக்கழக மாளுக்கர்கட்கு, இச்சோதனைகள் பயன்படும்.

இவற்றைத் தவிர, வேறு பல நிறைகளும் காட்டப் பெறுகின்றன. அவை யாவும் கூறுவோரின் மனப்பான்மையைப் பொறுத்தனவேயன்றி, ஆராய்ச்சியின் முடிவுகள் அன்று. எனவே, அவை ஈண்டு எடுத்துக் கூறப்பெறவில்லை.