பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 638

கட்டுரைச் சோதனையைச் சீர்படுத்துவது: இதுபற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்கள் கண்ட முடிவுகள் இரண்டு பிரிவுகளில் அடங்கும். அவை: () சோதனேக்குத் தேர்ந்தெடுக்கும் பொருளும் விளுக்களை அமைக்கும் முறையும் , (ii) விடையேடுகளைத் திருத்தும் முறைகள். ஒவ்வொருவரும் வகுத்துள்ள விதிகள் யாவும் நிலேயானவை அல்ல. எனவே, எல்லாக் காலத்துக்கும் எல்லோராலும் கையாளக்கூடிய மூன்று விதிகளே மட்டிலும் ஈண்டுக் கூறுவோம்.

(1) சோதனையின் திட்டமான நோக்கத்தை ஆசிரியர்களும் மாணுக்கர்களும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கட்டுரைச் சோதனையில் கருத்து, ஆராயும் ஆற்றல் போன்ற கூறுகளுக்குத்தான் முக்கியத்துவம் தருதல் வேண்டும். கவர்ச்சிகரமான இடங்கள், தொடர்புகளே உணர்த்தும் இடங்கள் போன்றவற்றை சோதனைக்குரிய பகுதிகளாகக் கொள்ளவேண்டும். முடிவு கூறுதல், தொகுத்துக் கூறுதல், fp-T6T நிகழ்ச்சிகளிலிருந்து பொது விதியாக்கிக் கூறுதல் போன்ற பகுதிகளைத் தேறுவது கடினம். ஆளுல், அவற்றைப்போல் மாணுக்கர்களின் மனப்பண்புகளைத் தெளிவாகக் காட்டும் வேறு பகுதிகளே இல்லையென்று கூறி விடலாம்.

(2) சோதனை செய்யப்படும் பகுதி சோதனையின் நோக்கத்தை யொட்டி யிருத்தல்வேண்டும். பாட நோக்கத்தையொட்டிச் சோதனைகள் அமைவது சிறப்பாகும். புதுமுறைச் சோதனை வினுக்களைப்போலவே இச்சோதனை வினுக்களும் அவகாசம் கொடுத்து ஆழ்ந்து சிந்தித்து ஆயத்தம் செய்யப் பெறுமானுல், இச்சோதனைகளால் மாணுக்கர்கள் பெறும் மதிப்பெண்களும் கூடியவரை திட்டமாக இருக்கும் அளவீட்டின் தரமும் பெருகும்.

(3) விடையேடுகளேத் திருத்துவதற்குத் திட்டமான விதிகளை வகுத்துக் கொள்ளவேண்டும். இவ் விதிகள் தேவையற்ற கூறுகளே விலக்குவனவாக அமைதல்