பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தமிழ் பயிற்றும் முறை

கருத்தில் அமைந்து அவர்தம் பணியைப் பயனுறும் வழியில் சிறப்பிக்கும். இவற்றை அறியாது கற்பிப்பவர் குன்று முட்டிய குருவிபோலவும், குறிச்சி புக்க மான் போல வும் இடர்ப்படுவதுடன் கற்பிக்கப்பெறும் மாணுக்கர்களும் விரும்பிய பயனே எய்தமுடியாது. இனி, கல்வித்திட்டத்தை வகுப்பதில் தமிழாசிரியர்கள் தம் மனத்தில் இருத்த வேண்டிய ஒருசில கருத்துக்களைக் காண்போம்.

கல்வியின் அவசியம் : குழந்தைகள் "தக்க சூழ்நிலையில் நல்ல முறையில் உடல் உரமும் மன வளமும் பெற்றுச் சிறந்த குடிமக்களாகத் திகழவேண்டு மென்பதே கல்வி யின் நோக்கமாகும். அதற்கேற்ற கல்வித் திட்டம் வகுக்கப்பெறல் வேண்டும். எத்தகைய கல்வித்திட்டமும் இன்றைய சமூக நிலைக்குப் பொருந்துமாறும், எதிர்காலச் சமூக நிலைக்கு ஏற்றவாறும் இருக்கும்படி அமையவேண் டும். சமூக நிலையும் குழந்தைகளின் இயல்புமே கல்வித் திட்டத்தின் முக்கிய எல்லைக் கோடுகளே வரையறை செய்யும். குழந்தைகளின் பல வளர்ச்சிப்படிகள், சமூகத் தேவைகள் ஆகியவற்றுடன் பொருந்தாத கல்வித் திட்டத்தால் யாதொரு பயனும் இராது.

மூவகைப்பட்ட கருத்துக்கள் கல்வி நிலையங்களில் நடை முறையில் அமைய வேண்டிய கல்வித் திட்டங்களேக் குறித்துப் பண்டிருந்து இன்றுவரை பல கல்வி நிபுணர்களும் அறிஞர்களும் பல வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். குழந்தையைப் பற்றியவை, வாழ்க்கையில் பயன் தரத் தக்கவை, குறிக்கோள் தன்மையை யுடையவை என்று அவற்றை மூன்று வகையில்

டக்கலாம். ஒவ்வொன்றையும் பற்றி ஒரு சிறிது ஈண்டு விளக்குவோம்.

(அ) குழந்தையைப் பற்றியவை : கல்வித் திட்டத்தை உருவாக்குவோர் குழந்தைகளின் பல்வேறு இயல்புகளே முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டுமென்று இக் கொள்கையையுடையார் வற்புறுத்துகின்றனர். குழந்தை