பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & O தமிழ் பயிற்றும் முறை

எனவே, இப் போக்குகளைக்கொண்டு ஒருவர் இயல்பாக விரும்பும் தொழில் துறையை அறுதியிடலாம். ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ட்ராங் என்ற பேராசிரியர் இத்துறையில் நன்முறையில் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

(iv) முன்னறி சோதனைகள் : பின்னேய வளர்ச்சியினேப். பற்றி முன்னரே அறிவு கொளுத்தவல்ல சோதனைகள் 'முன்னறி சோதனைகள்' (Prognostic tests) என்று வழங்கப்பெறுகின்றன. இவை குழந்தைகளின் தகுதிப் பாட்டினே ஆராய்ந்து அக் குழந்தைகள் எவ்வெத்துறைகளில் முன்னுக்கு வருவதற்கில்லை என்பதை உணர்த்துகின்றன. இவற்றைக்கொண்டு ஒரு குழந்தை கணிதம், மொழி, இசை முதலிய துறைகளில் முன்னுக்கு வரக்கூடுமா என்பதை ஆராயலாம். ஆனல், நடைமுறையில் இவற்றை அதிகமாகப் ப்யன்படுத்துவதில்லை. காரணம், இந்த அளவு கருவிகளில் மக்கள் இன்னும் அதிக நம்பிக்கை வைக்கவில்லை ; அவர்கள் நம்புகின்ற அளவுக்கும் அவை இன்னும் செம்மை யடையவில்லை. ஆசிரியர்களும் பொதுமக்களும் அவை குழந்தைகளின் திட்டமான நாட்டங்களே எவ்வாறு முன்னரே சரியாக அறிவிக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.

(v) gol-51# G#m.5%rsisir (Achievement tests) : முக்கியமாகக் கல்வி திலையங்களின் மூலம் மானுக்கர்கள் பெறும் அறிவினை அளந்தறியவல்ல சோதனைகளைத்தான் இப்பெயரால் குறிக்கின்றனர். பயன்படும் நோக்கத்திற். கேற்றவாறு இவை மாறுபடுகின்றன. எனவே, ஒரு திட்டமான நோக்கத்தை யொட்டி இவற்றைக் கையாள. வேண்டும். அன்றியும், அத்திட்டமான நோக்கத்தை யொட்டி அவை ஆக்கப் பெற்றுள்ளனவா என்பதைச் சியாக அறிந்துதான் பயன்படுத்தவும்வேண்டும். நோக்கத்தையொட்டி இச் சோதனைகள் பல வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் பொதுவான அறிவு நிலையினை அளந்தறிய வல்ல கணக்கெடுப்புச் சோதனைகள் (Survey tests) ஒரு வகை. இவற்றைப்போலவே, கற்ற