684 தமிழ் பயிற்றும் முறை
சோதனைகளே ஆயத்தம் செய்வதிலும் முன்னேற்றத்தைக் காணவேண்டும் என்பதில் கல்வி நிபுணர்களின் கவனம் சென்றது. எனவே, இத்துறையில் நன்முறையில் பயிற்சி பெற்ற அறிஞர்களும் உளவியல் வல்லுநர்களும் புது முறைச் சோதனைகளே ஆயத்தம் செய்வதில் ஆராய்ச்சிகளே மேற்கொண்டனர். இவர்கள் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாகச் சோதனைகளை ஆயத்தம் செய்வதில் சில விதிகள் வகுக்கப்பெற்றன ; அத்துறையில புதிய வழிகளும் வரை யறை செய்யப்பெற்றன.
தரப்படுத்திய சோதனைகளே நடைமுறையில் வகுப்பறைகளில் பயன்படுத்த இயலாது. ஏனெனில், அவற்றை ஆயத்தம் செய்த நிபுணர் வகுப்பறைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தலில் எந்தெந்தக் கூறுகளில் அழுத்தம் கொடுத்துக் கற்பித்தனர் என்பதை அறிய இயலாது. எனவே, தரப்படுத்திய சோதனைகள் பள்ளிகளே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், ஒரே வகுப்புக்களில் பல பிரிவுகளே ஒப்பிடுவதற்கும், ஓர் ஊருடன் பிறிதொரு ஊரை ஒத்துப் பார்ப்பதற்கும் மட்டிலுமே பயன்படுத்தலாம். எனவே, அதன் அடிப்படையில் ஆயத்தம் செய்யப்பெற்றனவும் தரப்படுத்தப்பெருதனவும் ஆசிரியர்களால் அவ்வப்பொழுது ஆயத்தம் செய்யப் பெறுவனவுமான புது முறைச் சோதனைகளே வகுப்பறைகளில் நடைமுறையில் பயன்பட்டு வருகின்றன. இவைகளைப்பற்றித் தாய்மொழியாசிரியர்கள் அறிந்து கொள்ளுதல்வேண்டும்.
புதுமுறைச் சோதனைகளில் கிட்டத்தட்ட முப்பத்தைந்துக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. என்ருலும், இவற்றை யெல்லாம் அறிஞர்கள் மறித்துணர் வகை (Recognition type), 63ờrs'ị ởn-ii susoa; (Recall type) sTs# p! இரு-கூறிட்டு வழங்குகின்றனர். மறித்துணர் வகையில் சரி-தவறு சோதனைகள், பல்விடையிற் பொறுக்குச் சோதனை கள், பொருத்தற் சோதனைகள் அடங்கும்; நினேவுகூர் வகையில் நிரப்புச் சோதனைகள் முதலியவை அடங்கும். சோதனைத் துறையில் முன்னேற்றம் அடைய அடைய