பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 41

யின் பட்டறிவு, செயல்கள், விருப்பங்கள் ஆகியவைகளே பள்ளி நடைமுறையைத் தீர்மானிக்க வேண்டுமென்றும் இவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியில் வயதானவர்கள் தம் பட்டறிவை ஒட்டியோ தம், விருப்பத்தை ஒட்டியோ பல கருத்துக்களே வலிந்து புகுத்துதல் கூடாது.

இம் முறையில் ஒரு திட்டமான முடிவே இல்லை ; குழந்தைகள் விடுதலை உணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வளர்ந்து இயல்பான முறையில் அறிவை அடைதலே இதன் நோக்கமாகக் கொள்ளலாம். அறிவை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமான முடிவு

இதில் இல்லை.

(ஆ) வாழ்க்கையில் பயன் தரத் தக்கவை : நடைமுறையில், மேற்கூறிய முறையுடன் வாழ்க்கையில் பயன் தரத்தக்க பல பகுதிகளைச் சேர்ந்துப் புதியதோர் திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். குழந்தை வாழ்க்கைக்கு அறிவையும் பிற திறன்களேயும் வளர்க்கும் பகுதிகளுடன் குழந்தையின் வளர்ந்த நிலையில் அதன் பிற்கால வாழ்க்கையில் தேவைப்படும் பல பகுதிகளும் சேர்க்கப்பட வேண்டுமென்று இவர்கள் வற்புறுத்துகின்றனர். இதுவே எல்லோருக்கும் தெரிந்த தெளிவான கருத்தாகும். இக் கருத்தையே அரிஸ் டாட்டில் என்ற மேனுட்டு அறிஞரும், ஆங்கில நாட்டுக் கல்விக் குழுவினரும் வற்புறுத்துகின்றனர். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்மொழியை நன்ருகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். இத்துடன் கணிதத்திலும் நல்ல அறிவு பெறவேண்டும். சுகாதாரம், உடற்பயிற்சி முதலிய பாடப் பகுதிகளும் பயன் அளிக்கவல்லவை. செயல் முறைக் கல்வி இவர்கள் கருத்தினை யொட்டியே எழுந்ததாகும்.

(இ) குறிக்கோள் தன்மையை யுடையவை . இவ்வகைக் ருத்துக் களைக் கூறுவோர் குழந்தையைப் பற்றியோ அதன்