பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 தமிழ் பயிற்றும் முறை

2. பூங்குழலாள் எனப் புலவர் போற்றினர். (அன்.

மொழித் தொகை.) - வெண்டாமரை மலர்ந்தது. (பண்புத்தொகை.)

4. பனிக்காலம், இறந்தகாலம், இராகுகாலம், முற். காலம், நிகழ்காலம் எனக் காலம் ஆறு வகைப்படும்.

5. காற்றில் அடிபட்ட பஞ்சு. (வன்ருெடர்க் குற்றிய

லுகரம்.)

2. பல்விடையிற் பொதுக்குச் சோதனைகள் : முற்கூறியவற்றைவிட இவை சற்று அருமையும் வளர்ச்சியுமுடையவை. இவற்றுள் ஒரு பொருள்பற்றிய பல தொடர் மொழிகளில் எது சரி என்று மாணுக்கர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டி வரும். இலக்கிய ஆசிரியர்கள், அவர்கள் வாழ்த்தகாலம், இலக்கிய மாந்தர்கள், தொகை நூல்களின் பெயர்கள் முதலியவற்றை இவற்ருல் தேறலாம். புது முறைச் சோதனைகளில் இவ் வகையை மானுக்கர்களும் ஆசிரியர்களும் பெரிதும் விரும்புகின்றனர். ஒவ்வொரு விளுவுக்கும் மூன்றி. லிருந்து ஐந்துவரை தொடர் மொழிகள் கொடுக்கப்பெறும்.

(எ-டு) கீழ்க்காணும் விளுக்களில் ஒவ்வொன்றின் கீழும் ஐந்து விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொருத்த மானவற்றின் எண்ணே மட்டிலும் வலப்புறத்திலுள்ள பகர வளைவுக்குள் எடுத்து எழுதுக.

1. நளவெண் பாவை இயற்றிய புலவர் :

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) கம்பன் (இ) புகழேந்தி

(ஈ) நக்கீரர்

(உ) செயங்கொண்டார்