பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 40 தமிழ் பயிற்றும் முறை

கட்குக் கொடுத்து அவர்கள் விடையிறுக்கும்பொழுது மாணுக்கர்கள் வினவும் எவ்வித ஐயங்களையும் அகற்று வதில் ஆசிரியர்கள் தலையிடக்கூடாது. ஒவ்வொரு வகைச் சோதனைகளிலும் எடுத்துக் காட்டுக்களேக் கொடுத்து மாணுக்கர் விடையிறுக்கும் முறையைத் தெளிவாகவிளக்கி விட்டால் ஆசிரியர்கள் உதவியை மாளுக்கர்கள் நாடார். எங்காவது அச்சுப் பிழைகளிருந்தால், ஆசிரியர் சோதனை யில் கலந்துகொள்ளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அப் பிழைகளை எடுத்துக்காட்டி ஐயத்தை நீக்கலாம்.

இச் சோதனைகளின் விடைகளைத் திருத்துதல் மிகவும் எளிது. வினுக்களுக்கேற்ற விடைகளே முன்னதாகவே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு வகைச் சோதனைக்கும் ஒவ்வொரு முறை உண்டு. சரியான விடை களே வண்ணப் பென்சிலால் அடையாளமிட்டுத் திருத்தினுல் பின்னல் அவற்றைக் கற்பித்தலில் பயன்படுத்து. வது எளிதாக இருக்கும். உறுதியாக அறியாமல் உத்தேசமாக விடையிறுப்பதை ஒழிப்பதற்கு உபாயங்கள் கண்டறியப் பெற்றுள்ளன. எல்லாவகைச் சோதனைகளிலும் உத்தேசமாக விடையிறுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. சரி-தவறு சோதனைகளிலும், பல் விடையிற் பொறுக்குச் சோதனைகளிலும் அவர்கள் உத்தேசமாக விடையிறுத்தல் கூடும். உத்தேசமாக விடையிறுப்பதைத் தவிர்ப்பதற்கு,

W s=R一ー五

என்ற வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி மதிப்பெண்கள் குறைக்கப்படுகின்றன. இதில் S என்பது மாளுக்கர்கள் பெறும் மதிப்பெண் ; R என்பது சரியான விடைகள் ; W என்பது தவருண விடைகள்: N என்பது உத்தேச விடைகள். களி தவறு சோதனையில் இவ்வாய்பாடும் S= R - W என்று அமைந்து விடுகின்றது. பல்விடையிற் பொறுக்குச் சேர்தன களில் 3, 4, 5 உத்தேச விடைகள் இருக்கும்பொழுது அது முறையே,