பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 64 1.

أنا ـ ج ـ W. s ـ ج ـ W. s س ج =

S=R-g; S=R-#: S = R - 4 என்று அமைகின்றது. உத்தேச விடைகளின் எண்ணிக்கை அதிகப்பட அதிகப்பட மாணுக்கர்கள் உத்தேசித்து விடையிறுப்பது குறைவதை அறியலாம்.

இந்தச் சோதனைகளின் நிறைகள் : புது முறைச் சோதனை களில் பல நிறைகள் உள்ளன. அவற்றை ஒரு சிறிது கவனிப்போம்.

°1. அளந்தறியும் எல்லையின் விரிவு: அதிகமான வினுக்களால் மிகுதியான பொருளறிவை அளக்க முடிகின்றது. எல்லாப் பகுதிகளிலும் மாணுக்கர்களின் பொருளறிவைத் தேறலாம்.

2. திருத்துவோரின் மனப்பான்மை : வினவப்பெறும் வினுக்களுக்குத் திட்டமான விடைகளிருப்பதால் திருத்துவோரின் மனப்பான்மை அல்லது உளச் சுவைகளுக்கேற்றவாறு மதிப்பெண்கள் குறைவதற்கும் மிகுவதற்கும் இங்கு இடமே இல்லே.

3. காலச் சிக்கனம் குறைந்த காலத்தில் மாளுக்கர்களின் மிகுந்த பொருளறிவைச் சோதிப்பதற்கும், குறைந்த காலத்தில் ஆசிரியர்கள் அதிகமான விடையேடுகளைத் திருத்துவதற்கும் இச் சோதனைகள் துணை செய்கின்றன. கற்பிக்கும் பாடப்பொருளே அறியாத எழுத்தாளர்களும் உயிரற்ற பொறிகளும் அவற்றைத் திருத்தி விடலாம்.

4. மாளுக்கர்கள் விடையளித்தல்: இம் முறை வினுக்களுக்கு மாணுக்கர்கள் அதிகமாக விடை எழுதத் தேவையில்லை ; எழுதுவதனால் உடற்களைப்பும் மனச் சோர்வும்: உண்டாகா. கட்டுரைச் சோதனையில் செய்வதுபோல் மாளுக்கர்கள் தேவையற்ற பொருள்களே எழுதி கயிறு விடும் வழக்கத்தை இதில் சிறிதும் மேற்கொள்ள முடியாது.

இந்தச் சோதனைகளின் குறைகள் : இச் சோதனைகளைப்

பற்றி ஆசிரியர்களும் திறய்ைவாளர்களும் (Critics) பல

த-42