பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.42 தமிழ் பயிற்றும் முறை

குறைகளே எடுத்துக்காட்டுகின்றனர். அவற்றுள் முக்கியமானவற்றை மட்டிலும் ஈண்டுக் கூறுவோம்.

(1) சில சமயம் ஆசிரியர்கள் இப் புதுமுறைச் சோதனைகள் மாணுக்கர்கள் தம் கருத்துக்களைக் கோவை யாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பதற்கு வாய்ப்புக்கள் நல்குவதில்லை என்று கருதுகின்றனர். ஆனால், கட்டுரைச் சோதனைகளும் இவற்றை நல்குகின்றன என்று சொல்ல இயலாது. இத்தகைய வாய்ப்புக்களைத் தரும் பொறுப்பைச் சோதனைகளுக்குத் தருதல் என்பது சிறிதும் பொருந்தாது. இதற்கென வேறு வாய்ப்புக்களைப் பள்ளி நடைமுறையில் அமைத்துக்கொள்ளலாம்.

(2) புது முறைச் சோதனைகள் தகவல் தரும் அறிவுபற்றிய பகுதிகளுக்கு அதிக அழுத்தம் தருவதாக உள்ளன என்றும், சிந்தனே ஆற்றலை வளர்ப்பதற்குச் சிறிதும் இவற்றில் இடமே இல்லே என்றும் கூறப்பெறுகின்றது. ஆல்ை, கட்டுரைச் சோதனைகளில் இதற்கு இடம் இருக். கின்றதென்று நினைத்ததற்கும் சிறிதும் இடமே இல்லை. நடைமுறையில் உள்ள சில சோதனைகளில் இல்லாவிடினும், காரண காரியத் தொடர்பு, தீர்மானிக்கும் ஆற்றல் முதலிய. வற்றைப் புதுமுறைச் சோதனைகளால் அளந்தறிய முடியாது என்பதற்கில்லை. தக்க முறையில், ஆயத்தம் செய்தால் இவற்றிற்கு இடம் அளிக்கலாம். -

(3) சில ஆசிரியர்களும் திறய்ைவாளர்களும் இம்முறைச் சோதனைகளில் உத்தேசமாக விடையளிப்பதற்கு இடம் உள்ளது என்று நம்புகின்றனர். இவ் வகைச் ச்ோதனைகளின் வடிவம் உத்தேசமாக விடையளித்தலுக்கு இடம் தருகின்றது என்று கூறலாமேயன்றி, அதற்கு ஆதரவு தந்து தூண்டுகின்றது என்று சொல்ல முடியாது. ஒரு சில வினுக்களுக்கு உத்தேசமாக விடையளித்தல் கூடுமென்ரு லும், திருத்தும்பொழுது அதற்கு மதிப்பெண்கள் குறைக்க வழி வகுத்திருப்பதால் இப் பழக்கம் வளர்வதற்கு அதிக இடமே இல்லை.