பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 தமிழ் பயிற்றும் முறை"

பொதுவாக வுள்ள சில விதிகளே மட்டிலும் ஈண்டு ஒருசிறிது ஆராய்வோம்.

(1) சோதனைகளின் நோக்கம் முதலில் திட்டமாக வரையறை செய்யப்பெறுதல் வேண்டும். சோதனையின் நோக்கம் தெரிந்த பிறகுதான் அதன் ஏற்புடைமை தீர்மானிக்கப்பெறும். அறிந்துள்ள தகவல்களை அளப்பதா, அடைந்துள்ள ஆராயும் ஆற்றலே அளப்பதா, ஒரு குறிப்பிட்ட குறைகளே அளந்தறிவதா என்பன போன்ற நோக்கங்கள் முதலிலேயே திட்டப்படுத்தப் பெறுதல் வேண்டும்.

(2) சோதனைகளுக்கேற்ற விவரங்களைப் பாடத்திட்டங் களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவும் மேற்குறிப்பீட்ட கூறும் ஒரு சோதனையின் ஏற்புடைமையையும் நம்பகத்தையும் அறுதியிடுவதற்கு மிகவும் முக்கியமானவை. சோதனைகளின் நோக்கத்திற் கேற்றவாறு பாடத்திட்டங்களிலிருந்து விவரங்களேத் தேர்ந்தெடுப்பதில் கருத்துரன்ற வேண்டும். ஒரு குறிப்பிட்ட குறையறி சோதனையை ஆயத்தம் செய்யவேண்டுமானல் பாடத்திட்டத்தில் அத்தகைய கூறுகளை மட்டிலும் தேர்ந்தெடுப்பதற்குப் பாடத் திட்டம் முழுவதும் பார்வை செலுத்தப் பெறுதல் வேண்டும். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. -

(3) சோதனைகளுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்த விவ. ரங்களைப் பல்வேறு சோதனைகளில் எவ்வாறு பொருத்துவது என்பது அடுத்து அறுதியிடவேண்டியபடியாகும். தேர்ந்தெடுத்த விவரங்களே அவற்றின் இயல்புகளுக்கேற்றவிறுை சரி-தவறு, பல்விடையிற் பொறுக்கல் போன்ற சோதனைகளில் பொருத்திச் சோதனைகளை ஆயத்தம் செய்யவேண்டும். ஆராயும் ஆற்றல்களே சரி - தவறு போன்ற சோதனைகளால் அளந்தறிய இயலாது. பல்விடை யிற் பொறுக்கல் சோதனை இதை அளந்தறிய மிகவும் ஏற்றது. இவ்வாறு நோக்கத்திற் கேற்றவாறு சோதனைகளே ஆக்குதல் இன்றியமையாதது.