பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் பயிற்றும் முறை

இக்கால பிற்கால செயல் முறைகளைப் பற்றியோ அக்கறை கொள்ளுவதில்லை. அவர்கள் குழந்தையின் இன்றைய பட்டறிவைப்பற்றி அதிகம் கருதாது வழிவழியாக மனிதன் பெற்றுள்ள அறிவில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இதுகாறும் மனிதன் பெற்றுள்ள அறிவுச் செல்வத்தைச் சுருங்கிய முறையில் பள்ளிமூலம் குழந்தைக்குக் கொடுப்பதே அவர்கள் நோக்கமாகும். பள்ளியின் நோக்கம் நாகரிகத்தைப் பிரதிபலிப்பதே என்று அவர்கள் கருதுகின்றனர் ; மானிட இனம் பெற்றுள்ள அறிவு ஏதாவது குறிப்பிட்ட முறைகளில் பாகுபாடு செய்யப் பெற்றுக் குழந்தைக்குத் தரப்பெறல் வேண்டும் என்பது அவர்களது கொள்கை, எனவே, கல்வித் திட்டத்தில் இலக்கியம், அறிவியல், கணிதம், வரலாறு, நிலநூல், இசை, ஓவியம் போன்ற பல துறைகளைப்பற்றிய பகுதிகள் அடங்கி யிருக்கவேண்டுமென்பது பெறப்படுகின்றது. இதுபற்றிய விவரங்களே சர் பெர்லி ஆண் என்பார் மிகத் தெளிவாக விளக்குகின்ருர் ; ஆண்டுக் கண்டு கொள்க. சிலர் அனுபவத்தில் இத்தகைய உயர்ந்த குறிக்கோள் பயன்படாது என்று கருதலாம். ஆணுல், உள்ளுவதெல் லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவர் கொள்கைக்கிணங்க உயர்ந்த குறிக்கோளேக் கொள்ளுவதில் தவறு ஒன்றும் இல்லை. அன்றியும்,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்?

என்ற பொய்யாமொழியையும் நினைந்து பார்த்தால் ஓரள வாவது வெற்றி காணலாம் என்பதில் தடை யொன்றும் இல்லை. $

சில விதிகள் : மேற் கூறப்பெற்ற அறிஞர்களின் கருத்துக்களை ஆராய்ந்தால், கல்வித் திட்டங்கள் வகுப்பதில் சில

  • Sir Percy Nunn; Education—its Data and Principles. பக்கம் 233, 24க்.
  • குறள்-66,